அரசியலுக்கு நான் ஒன்றும் புதிதல்ல... எனக்கு அரசியல் பற்றி தெரியும்.. ரஜினி பேச்சு

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ரஜினிகாந்தின் பரபரப்பு பேச்சு வீடியோ

  சென்னை: அரசியலுக்கு நான் ஒன்றும் புதிதல்ல என ரஜினிகாந்த் பேசி இருக்கிறார். மேலும் அரசியலில் என்ன சிரமம் எல்லாம் இருக்கிறது என்று எனக்கு தெரியும் என்றும் கூறியுள்ளார்.

  சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களிடம் ரஜினி உரையாற்றி வருகிறார். இந்த சந்திப்பில் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  Rajini says that he knows what is politics

  இதில் பேசிய ரஜினி ''அரசியல் குறித்து நான் என்ன சொல்வேன் என ஊடகங்களுக்குதான் ஆர்வம். எல்லோரும் நான் எப்போது அரசியலும் வருவேன் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்'' என்றார்.

  மேலும் ''அரசியலுக்கு நான் புதிதல்ல. அரசியலில் என்ன சிரமம் இருக்கிறது என்று தெரியும். அரசியலில் எப்போது என்ன நடக்கும் என்று எனக்கு தெரியும்'' என்று கூறினார்.

  அதேபோல் ''அரசியலுக்கு வந்தால் வெற்றபெற வேண்டும். போர் என்று வந்துவிட்டால் வெற்றி பெற வேண்டும். அரசியலுக்கு நுழைந்தால் கண்டிப்பாக வெற்றிபெறவேண்டும்'' என்றும் குறிப்பிட்டார்.

  இவர் அரசியல் குறித்து பேசும் போது ரசிகர்கள் விசில் அடித்து கொண்டாடினார்கள்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Rajini meets his fans in Ragvendra Hall. While speaking with his fans he says that he knows what is politics. He also added that politicians should win.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற