ஆன்மீக அரசியல்னா அது வேற.. இந்த ஆத்மா இருக்கே அது வேற.. ரஜினி பேசுகிறார்!
சாதி,மதசார்பற்ற அறவழி அரசியல் தான் ஆன்மீக அரசியல் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை : உண்மையான, நேர்மையான, நாணயமான சாதி மதச்சார்பற்ற அறவழி அரசியல் தான் ஆன்மீக அரசியல் என்று நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்திடம், கட்சியின் பெயர், சின்னம் முடிவு செய்யப்பட்டு விட்டதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஜினி கட்சியின் பெயர், கொடி பற்றி எனக்கே தெரியாது போகப் போகத் தான் தெரியும்.

மக்களை சந்திப்பேனா இல்லையா என்பதும் போகப் போகத் தான் தெரியும். ஆன்மீக அரசியல் என்றால் உண்மையான, நேர்மையான, நாணயமான சாதி மதச்சார்பற்ற அறவழி அரசியல். இது தான் ஆன்மீக அரசியல். ஸ்பிரிச்சுவாலிட்டி என்றால் ஸ்பிரிட் ஆத்மா அது வேறு என்று கூறினார்.
இதனிடையே சென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்து ரஜினிகாந்த் பேசினார். அப்போது, என்னுடைய அரசியல் அறிவிப்பை உலக அளவில் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கு நன்றி என தெரிவித்தார். தமிழகத்தில் இருந்து தான் பல வரலாற்று மாற்றங்கள் அரசியிலில் நடந்துள்ளது.
அரசியலில் புரட்சியை ஏற்படுத்தவே நான் விரும்புகிறேன். தற்போது அரசியலில் மாற்றம் வந்தால் தான் எதிர்காலத்தில் மக்கள் நல்ல வாழ்வை வாழ முடியும். எஸ்எஸ்எல்சி தேர்வில் தோல்வியடைந்த பின்னர், நானும் 2 மாதங்கள் கன்னட செய்தித்தாள் ஒன்றில் ப்ரூப் ரீடராக பணியாற்றியிருக்கிறேன் என்றார். எனக்காக ஊடகத்தினர் போயஸ் கார்டனில் சாலை ஓரத்தில் காத்திருப்பது வருத்தமாக இருக்கிறது.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல்வாதியாக அவதாரம் எடுத்ததற்குப் பிறகு மீடியாக்களை அவர் அணுகும் முறையில் முற்றிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. டிசம்பர் 26 முதல் ரசிகர்களை சந்திக்க ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு வரும் போதெல்லாம், போயஸ் கார்டனில் காத்திருந்த ஊடகத்தினரிடம் அதிரடியாக எந்த பேட்டியைத் தராவிட்டாலும் நின்று அவர்களின் கேள்விகளுக்கு மழுப்பலாகவாவது ஒரு பதிலை நின்று சொல்லிவிட்டுத் தான் சென்றார்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா?












Click it and Unblock the Notifications