வருமான வரித் துறைக்கு பயப்படுகிறார் ரஜினி- சீமான் பேச்சு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வருமான வரித் துறை சோதனைக்கு ரஜினி பயப்படுவதால்தான் தமிழகத்தை பற்றி மட்டும் பேசுகிறார் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி அரசியலுக்கு வருவதாக தனது ரசிகர்கள் முன்னிலையில் ரஜினி அறிவித்தார். இதையடுத்து ரஜினி மக்கள் மன்றம் என்ற இணையதளத்தையும் உருவாக்கினார்.

Rajinikanth gets panic for Income Tax raid, says Seeman

இதைத் தொடர்ந்து நேற்றைய தினம் ரஜினி சென்னை போயஸ் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சிஸ்டம் சரியில்லை என்பது இந்தியாவிலா அல்லது தமிழகத்திலா என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு ரஜினி, முதலில் தமிழகத்தில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும் என்றார். ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வரும் சீமானிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது.

அப்போது சீமான் கூறுகையில் வருமான வரித்துறைக்கு பயந்தே தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி கூறுகிறார். தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி கூறுவது தவறு என்றார் சீமான்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Naam Tamilar Movement Organiser Seeman says that Rajinikanth says the system is not good in TN, only because of he is afraid of Income Tax raids.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற