பாஜகவின் ஸ்லீப்பர் செல்தான் ரஜினிகாந்த்... சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் பகீர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பாஜகவின் ஸ்லீப்பர்செல் தானாம் ரஜினி பியூஸ் மானுஸ் சொல்கிறார்

  சென்னை: நடிகர் ரஜினிக்காந்த் பாஜகவின் ஸ்லீப்பர் செல் என சமூக ஆர்வலர் பியுஷ் மானுஷ் தெரிவித்துள்ளார்.

  நடிகர் ரஜினிக்காந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். அரசியலுக்கு வருவது உறுதி என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

  ரஜினியின் அறிவிப்புக்கு அவரது ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால் அதேசமயம் ரஜினியின் அரசியல் வருகைக்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

  ரஜினியும் டயலாக் பேசுகிறார்

  ரஜினியும் டயலாக் பேசுகிறார்

  சமூக ஆர்வலரான பியூஷ் மானுஷ் சன்நியூஸ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது பாஜக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எல்லாத்தையும் மாற்றிவிடுவோம் என டயலாக் பேசியதை போலவே ரஜினியும் பேசுகிறார் என அவர் குற்றம்சாட்டினார்.

  மோடி வந்த பிறகு அதிகரிப்பு

  மோடி வந்த பிறகு அதிகரிப்பு

  சிஸ்டம் கெட்டு போயுள்ளதாக கூறும் ரஜினி எந்த சிஸ்டம் கெட்டுபோயுள்ளது தெளிவு படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். மோடியும் பிரதமராவதற்கு முன்பு இப்படிதான் டயலாக் பேசினார். ஆனால் அவர் பிரதமரான பின்புதான் எல்லையில் அதிக மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.

  யார் அதிகாரம் கொடுத்தது?

  யார் அதிகாரம் கொடுத்தது?

  மோடி ஆட்சியில் தான் பாகிஸ்தான் அதிக எல்லை தாண்டி தாக்குதல்களை அரங்கேற்றி வருவதாகவும் அவர் கூறினார். தமிழகத்தில் சிஸ்டத்தை மாற்ற ரஜினிக்கு யார் அதிகாரம் கொடுத்தது? சிஸ்டத்தை மாற்ற நீங்கள் யார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

  பிரகாஷ் ராஜ் போராட்டம்

  பிரகாஷ் ராஜ் போராட்டம்

  இன்னும் களத்தில் இறங்காமல் எந்த போராட்டத்திலும் கலந்துகொள்ளாமல் மக்கள் பிரச்சனையில் தலையிடாமல் உள்ளார் என்றும் பியூஷ் மானுஷ் கூறினார். மேலும் பிரகாஷ் ராஜ் கர்நாடகாவில் கவுரி லங்கேஷ் கொலைக்கு எதிராக போராடியதையும் மதவாத அரசியலுக்கு எதிராக பேசியதையும் பியூஷ் மானுஷ் சுட்டிக்காட்டினார்.

  சந்தேகமாக உள்ளது

  சந்தேகமாக உள்ளது

  தமிழகத்தில் திராவிட அரசியல் மோசமாக இருந்தாலும் ஊழல் இருந்தாலும் தமிழகம் தான் இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலம் என்றும் அவர் கூறினார். எதற்கும் குரல் கொடுக்காத ரஜினி எடுத்தவுடனே முதல்வராவேன் என கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

  பாஜக ரஜினி இறக்கியிருக்கிறது

  பாஜக ரஜினி இறக்கியிருக்கிறது

  தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகளை பாஜக ஒழிக்க முயன்றது என்றும் பியூஷ் மானுஷ் குற்றம்சாட்டினார். திராவிட கட்சிகளை ஒழிக்கவே பாஜக ரஜினியை அரசியலில் இறக்கியிருக்கிறது என்றும் அவர் கூறினார்.

  பாஜகவின் ஸ்லீப்பர்செல்

  பாஜகவின் ஸ்லீப்பர்செல்

  ரஜினிக்காந்த் பாஜகவின் ஸ்லீப்பர்செல் என்றும் பியூஷ் மானுஷ் கடுமையாக விமர்சித்தார். பாஜக ரஜினி மூலம் தமிழகத்தை சுடுகாடாக மாற்ற முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

  பாஜகவுக்காக அரசியல்

  பாஜகவுக்காக அரசியல்

  ஆர்கே நகரில் பாஜக தோல்வியடைந்துள்ள நிலையில் ரஜினி மூலம் தமிழகத்தை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது என்றும் அவர் கூறினார். இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டபோதும் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டபோதும் வாய்திறக்காத ரஜினி தற்போது பாஜகவுக்கு அரசியல் குதித்துள்ளார் என்றும் பியூஷ் மானுஷ் விமர்சித்தார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Social activist Piyush manush says Rajinikanth is a sleeper cell of BJP. BJP is directing Rajinikanth. Rajinikanth is speaking only cinema dialogues Piyush manush said.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற