கேமரா முன்னால் நெருப்பு போல் நடிப்பை காட்டியவர் ஸ்ரீதேவி- ரஜினி புகழாரம்
கேமரா முன்னால் நெருப்பு போல் நடிப்பை காட்டியவர் ஸ்ரீதேவி.
Recommended Video

சென்னை: கேமரா முன்னால் ஸ்ரீதேவி வந்துவிட்டால் அப்படியே அவர் தனது நடிப்பை மிகவும் உக்கிரமாக வெளிப்படுத்துவார் என்றும் அவர் ஒரு பிறவி நடிகை என்றும் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.
துபாயில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரீதேவி மாரடைப்பால் இறந்து விட்டார். இந்த திடீர் இழப்பால் திரையுலகினர் மிகவும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இதுகுறித்து ரஜினிகாந்த் கூறுகையில், ஸ்ரீதேவி இறந்த செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. அவர் 3 மாதங்களுக்கு முன்னர் சென்னை வந்திருந்தபோது ஸ்ரீதேவி, போனி கபூர், நான் ஆகியோர் குடும்பத்தினருடன் சந்தித்தோம்.

யாராலும் ஈடு செய்ய முடியாது
என்னுடைய 2-ஆவது படத்திலிருந்து கூடவே நடித்தவர். எனது மிக நெருங்கிய நண்பர். அவருடைய இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது.

நினைவுகளில் இருப்பார்
அவரது இழப்பால் வாடும் போனி கபூர், இரு மகள்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்ரீதேவி இறந்தாலும் அவர் சினிமா மூலம் நம்முடைய நினைவுகளில் இருப்பார்.

உக்கிரமாக இருக்கும்
கேமராவுக்கு முன்னால், கேமராவுக்கு பின்னால் என இரு ஸ்ரீதேவிகள் இருப்பர். கேமராவுக்கு பின்னால் இருக்கும் ஸ்ரீதேவி எதுவுமே தெரியாதது போல் இருப்பார். ஆனால் கேமராவுக்கு முன்னால் அவருடைய நடிப்பு கரென்ட் பாசவது போல் உக்கிரமாக இருக்கும்.

இந்தியில் ஜொலித்தார்
யார் மீதும் கோபம் கொள்ளமாட்டார். இந்தியில் ஒரு வார்த்தை கூட தெரியாமல் அங்கு அத்தனை படங்களில் அதுவும் ஈஸியாக எப்படி நடித்தார் என்பது எங்களுக்கு ஆச்சரியம்தான்.

நண்பரை இழந்துவிட்டேன்
அவர் ஒரு பிறவி நடிகை. எனக்கு சினிமா துறையில் நெருங்கிய நண்பர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களுள் ஒருவரை நான் இழந்துவிட்டேன். மிகவும் வேதனையாக உள்ளது. அவரது இழப்பு இந்திய திரையுலகத்துக்கே மிகப் பெரும் இழப்பாகும் என்றார் ரஜினி.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications