இத்தாலியில் உயிருடன் இருப்பது பிரபாகரனா? பொட்டம்மானா? சு.சுவாமி சொல்வது யாரை?
இத்தாலியில் ராஜீவ் கொலை சதிகாரர் உயிருடன் இருப்பதாக சொல்கிறார் சுப்பிரமணியன் சுவாமி.
Recommended Video

சென்னை: ராஜீவ் கொலையின் தலைமை சதிகாரர் இத்தாலியில் இருப்பதாக பாஜக ராஜ்யசபா எம்.பி. சொல்வது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனையா? அல்லது புலிகள் இயக்கத்தின் புலனாய்வு பொறுப்பாளர் பொட்டம்மானையா? என்கிற கேள்வி சமூக வலைதளங்களில் எழுப்பப்படுகிறது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 தமிழரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். இதனை வரவேற்று சுப்பிரமணியன் சுவாமி ட்வீட் ஒன்றை போட்டிருக்கிறார்.

இந்த ட்வீட் பதிவின் முடிவில், தலைமை சதிகாரர் இத்தாலியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ராஜீவ் கொலை வழக்கில் முக்கிய சதிகாரர்கள் எனக் குறிப்பிடப்படுவது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டம்மான் இருவரும்தான்.
இலங்கையில் யுத்தம் 2009-ல் முடிவுக்கு வந்த போது விடுதலைப் புலிகள் இயக்கமே அழிக்கப்பட்டதாக கூறப்பட்டது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் யாருமே இல்லை எனவும் கூறப்பட்டது.
ஆனால் தற்போது சுப்பிரமணியன் சுவாமி, முக்கிய சதிகாரர் இத்தாலியில் இருப்பதாக கூறியுள்ளார். சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிடுவது பிரபாகரனையா? பொட்டம்மானையா? என்பதுதான் சமூக வலைதளங்களில் எழுப்பப்படுகிற கேள்வி.
Rashtrapati has flatly rejected the stupid Illegal resolution of the TN Legislative Assembly to set Rajiv Gandhi the killer conspirators free. Actually the killers are lucky that they have not been hanged as per SC .The Head conspirator is living in Italy but seriously ailing
— Subramanian Swamy (@Swamy39) June 15, 2018
மதிமுக பொதுச்செயலர் வைகோ உள்ளிட்டோர் பிரபாகரன், தேவைப்படும் சூழ்நிலையில் வெளியே வருவார்; அவர் மரணிக்கவில்லை என கூறிவருகிறார். இப்படியான நிலையில் சுப்பிரமணியன் சுவாமியின் கருத்து பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications