For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

7 தமிழர்கள் விடுதலை செய்யப்படுவார்களா, மாட்டார்களா? ஆளுநர் அதிகாரங்கள் என்ன தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள 7 தமிழர் விடுதலையில் ஆளுநர் என்ன மாதிரி நடவடிக்கை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக சட்ட வல்லுநர்கள் பல வகையில் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழக அமைச்சரவை கூட்டம் கூடி முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் மற்றும் நளினி ஆகியோரை, விடுதலை செய்வதற்கு ஆளுநருக்கு பரிந்துரை செய்யும் வகையில் தீர்மானம் நிறைவேற்றியது.

பேரறிவாளன் மனு மீது தமிழக அரசு பரிந்துரை செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்த நிலையில், அவரோடு சேர்த்து, 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை 161 விதியின் கீழ் முடிவு செய்துள்ளது.

ஆளுநர் முன்னிலையில் உள்ள வாய்ப்புகள்

ஆளுநர் முன்னிலையில் உள்ள வாய்ப்புகள்

அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் ஏற்கலாம். அதே நேரம் இந்த சட்ட விதிமுறைகளின் கீழ் இத்தனை நாட்களுக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் கிடையாது. இரண்டாவது வாய்ப்பு என்னவென்றால் இந்த பரிந்துரையை அவர் நிராகரிக்கலாம். அவ்வாறு செய்தால் மனுதாரர்கள் மீண்டும் நீதிமன்றத்தை நாட வேண்டியிருக்கும். மூன்றாவது என்னவென்றால், அமைச்சரவைக்கே அதன் பரிந்துரையை திருப்பி அனுப்பி இந்த விஷயத்தை அமைச்சரவையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கலாம்.

மன்னிக்கக் கூடிய அதிகாரம்

மன்னிக்கக் கூடிய அதிகாரம்

மாநில ஆளுநருக்கு, குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்குவது, அல்லது தண்டனையை குறைப்பது போன்ற விஷயங்களில் முடிவு எடுக்க அதிகாரம் உள்ளது. எந்த ஒரு வழக்காக இருந்தாலும் ஆளுநருக்கு அதிகாரம் உண்டு. ஆனால் மாநில அரசின் சட்டங்களின் கீழ் தண்டனை பெற்றவர்கள் கருணை மனுக்கள் மீது மட்டுமே ஆளுநர் தலையிட முடியும். தேசிய அளவிலான சட்டங்களில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை மன்னிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடைாயது. இதுதான் குடியரசுத் தலைவருக்கும் ஆளுநருமான இந்த விஷயத்தில் உள்ள வேறுபாடு.

குடியரசு தலைவர்

குடியரசு தலைவர்

மேலும் மரண தண்டனை பெற்ற கைதியின் தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் மாநில ஆளுநருக்கு கிடையாது. அது மாநில அரசின் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தீர்ப்பாக இருந்தாலும், ஆளுநர் அதிகாரம் அதில் செல்லுபடியாகாது. இந்த விஷயத்தில் குடியரசுத்தலைவரிடம் மட்டுமே அதிகாரம் உள்ளது.
நன்னடத்தை அடிப்படையில் கைதிகளை விடுதலை செய்வதற்கு சில தினங்களை மத்திய அமைச்சரவை முடிவு செய்து கடந்த ஜனவரியில் அறிவிப்பு வெளியிட்டது. மகாத்மா காந்தியின் 150வது பிறந்த ஆண்டை முன்னிட்டு இவ்வாண்டு, அக்டோபர் 2ம் தேதி, சத்தியாகிரக நிகழ்வையொட்டி, 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி ஆகிய தினங்களில் கைதிகளை விடுதலை செய்யலாம்.

தகுதிகள்

தகுதிகள்

55 வயதை கடந்து, தண்டனை காலத்தில் பாதியை பூர்த்தி செய்திருந்தால், பெண் கைதிகளை விடுதலை செய்ய முடியும். இதேபோல தண்டனை காலத்தில் பாதியையாவது பூர்த்தி செய்த 55 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளையும் விடுதலை செய்ய முடியும். ஆண்கள் என்றால் அவர்கள் தண்டனை காலத்தில் பாதியையாவது பூர்த்தி செய்து 60வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட உடல் ஊனம் கொண்ட மாற்றுத்திறனாளிகளை, தண்டனை காலத்தில் பாதியை பூர்த்தி செய்திருந்தால் விடுதலை செய்யலாம். உடல்நலம் நலிவுற்ற கைதிகள், தண்டனை காலத்தில் 66 விழுக்காட்டை பூர்த்தி செய்த கைதிகள் போன்றவர்களை, மாநில அரசின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் விடுதலை செய்ய உத்தரவிடலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேநேரம் மோசமான குற்றச் செயல்களான, வரதட்சணை சாவு, பலாத்காரம், ஆள்கடத்தல், பொடா, உபா, தடா, எப்ஐசிஎன், போஸ்கோ, லஞ்ச ஒழிப்பு சட்டங்களின் கீழ் தண்டனை பெற்றவர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது.

English summary
The decision by the Tamil Nadu to release the seven convicts in the Rajiv Gandhi assassination case may not be legally viable say experts. The AIADMK government in Tamil Nadu Sunday decided to recommend to the state Governor Banwarilal Purohit, the release of all seven life convicts in the Rajiv Gandhi assassination case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X