சகாயத்தை முதல்வராக ரஜினி அறிவிக்க வேண்டும் - அடித்துக் கூறும் ஒன்இந்தியா வாசகர்கள்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனிக் கட்சி தொடங்கினால், முதல்வர் வேட்பாளராக ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை அறிவிக்க வேண்டும் என்று ஒன்இந்தியா தமிழ் இணையதள வாசகர்கள் உறுதிபடக் கூறியுள்ளனர்.
ரஜினி தனிக் கட்சி தொடங்கும் மன நிலைக்கு வந்துள்ளார். இதுதொடர்பாக ரசிகர்களுடன் முதல் கட்டமாக பேசியுள்ளார். சிஸ்டம் கெட்டுப் போயுள்ளதாகவும் கூறியுள்ளார். இது குறித்து வாதப் பிரதிவாதங்கள் களை கட்டியுள்ளன.
இந்த நிலையில், ரஜினி தனிக் கட்சி தொடங்கினால் தமிழக மக்கள் அனைவரும் விரும்பும் சகாயத்தையே முதல்வர் வேட்பாளராக்க வேண்டும் என்று ஒன்இந்தியா தமிழ் வாசகர்கள் உறுதிபடக் கூறியுள்ளனர்.

ரஜினி தனிக் கட்சி தொடங்கினால்
இதுகுறித்து ரஜினி தனிக் கட்சி தொடங்கி சகாயத்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டுமா? என்ற கேள்வியை நமது வாகர்களிடம் கேட்டிருந்தோம். அதற்கு பெரும்பாலான வாசகர்கள் அறிவிக்க வேண்டும் என்று அடித்துக் கூறியுள்ளனர்.

நல்ல யோசனை, ரஜினி உடனே இதை செய்யனும்
இது நல்ல யோசனை, ரஜினி உடனே இதைச் செய்யனும் என்ற பதிலுக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது. அதாவது விழுந்த வாக்குகளில் 84.33% வாக்குகள் இதற்கே கிடைத்துள்ளன.

கூடாது, ரஜினியே முதல்வர் வேட்பாளராகனும்
சகாயம் தேவையில்லை. ரஜினியே முதல்வர் வேட்பாளராகனும் என்ற பதிலுக்கு ஆதரவு தெரிவித்தோர் 15.67% பேர் மட்டுமே.

மக்கள் மனம் கவர்ந்த சகாயம்
ஐஏஎஸ் அதிகாரியான சகாயம் தமிழக மக்களை ஒட்டுமொத்தமாக தனது செயல்பாடுகளால் கவர்ந்தவர். ஊழல் கறை படியாதவர், லஞ்சத்துக்கு பரம விரோதி. நேர்மையானவர். அதை விட முக்கியமாக யாருக்கும் அஞ்சாதவர். இதனால்தான் சகாயம் மக்கள் மனதில் வீற்றுள்ளார்.

சகாயத்துடன் சேர்ந்தால்தான்
எனவேதான் மக்கள் மனதைப் பிரதிபலிக்கும் வகையில், சகாயத்தையே முதல்வர் வேட்பாளராக ரஜினி அறிவிக்க வேண்டும் என்று நமது வாசகர்களும் அடித்துக் கூறியுள்ளனர்.
ரஜினி தனிக் கட்சி தொடங்கி சகாயத்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டுமா?
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications