ஜெ. மரண சர்ச்சை : ராஜ்சபாவில் ஓபிஎஸ்- சசி அணி எம்.பிக்கள் மோதல்.. விஜிலாவுக்கு கடும் கண்டனம்!
ஜெயலலிதா மரணத்திற்கு நீதி விசாரணை கேட்டு ராஜ்யசபாவில் துணை தலைவர் குரியனை முற்றுகையிட்டு ஓபிஎஸ் அணி எம்.பிக்கள் முழக்கமிட்டனர். சசிகலா அணி எம்பிக்களும் பதிலுக்கு கோஷமிட்டதால் பரபரப்பும், அமளியும் ஏற்ப
சென்னை: ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ராஜ்யசபாவில் ஓபிஎஸ் அணி எம்.பிக்கள் மைத்ரேயன் உள்ளிட்டோர் ஜெயலலிதா புகைப்படத்துடன் துணை தலைவர் இருக்கையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பது ஓ.பன்னீர் செல்வம் அணியின் கோரிக்கை.
இதனை வலியுறுத்தி இன்று ராஜ்யசபாவில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த அதிமுக எம்பிக்கள் முழக்கமிட்டனர். கையில் ஜெயலலிதா படத்தை எடுத்துக்கொண்டு துணை தலைவர் குரியன் இருக்கையை முற்றுகையிட்டனர்.

ஓபிஎஸ் அணி முற்றுகை
மைத்ரேயன் உடன் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த எம்.பிக்கள் அனைவரும் வேண்டும் வேண்டும் சிபிஐ விசாரணை வேண்டும் என்று முழக்கமிட்டனர். சசிகலா புஷ்பாவும் அப்போது துணை தலைவர் இருக்கை அருகே சென்று முழக்கமிட்டார்.

துணைத்தலைவர் கண்டனம்
இதற்கு துணை தலைவர் குரியன் கண்டித்தார். உறுப்பினர்களை இருக்கையில் சென்று அமருமாறு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தமிழக பிரச்சினை தொடர்பான விவாதம் நடைபெற்றது. நெடுவாசல் பிரச்சினை தொடர்பாக ஒதுக்கப்பட்ட நேரத்தில் மைத்ரேயன் எம்.பி ஜெயலலிதா மரணம் தொடர்பாக பேசினார்.

மைத்ரேயன் பேச்சு
ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் மற்றும் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கைகளில் முரண்பாடுகள் இருப்பதாக கூறி மைத்ரேயன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட என்று வலியுறுத்தினார். மத்திய அரசு விசாரணை நடத்தினால் மட்டுமே ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் விலகும் என்றும் கூறினார்.

விஜிலா சத்யானந்த்
மைத்ரேயன் பேசிக்கொண்டிருக்கும் போது சசிகலா அணியைச் சேர்ந்த விஜிலா சந்தியானந்த் குறுக்கிட்டார். மைத்ரேயனை பேச விடாமல் தடுத்தார். இதனால் எரிச்சலான துணை தலைவர் குரியன், விஜிலா சத்யானத்தை கடுமையாக கண்டித்தார். ஒரு உறுப்பினர் பேசும் போது குறுக்கிடுவது நடாளுமன்ற மரபா? என்று கேட்ட துணை தலைவர் உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கேட்டார். மைத்ரேயனை பேச விடாமல் தடுக்க உங்களுக்கு உரிமையில்லை என்றும் கூறினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications