தேர்தல் தேதி அறிவித்த பின்னர்தான் ஞாபகம் வருகிறதா? தமிழிசையை சாடிய வாழப்பாடியார் மகன்!

ஆர்கே நகர் குடியிருப்பு பிரச்சனை குறித்து பேசிய தமிழிசையை வாழப்பாடியாரின் மகன் ராம சுகந்தன் டிவிட்டரில் சாடியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்கே நகர் குடியிருப்பு பிரச்சனை குறித்து பேசிய தமிழிசையை வாழப்பாடியாரின் மகன் ராம சுகந்தன் டிவிட்டரில் சாடியுள்ளார்.

ஆர்கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் அதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

Rama Suganthan responded to Tamilisai soundara rajan tweet about RK Nagar people issue

இந்நிலையில் ஆர்கே நகர் சென்னியம்மன் கோவில் தெரு குடியிருப்பு பிரச்சனை குறித்து தமிழிசை சவுந்தரராஜன் டிவிட்டியிருந்தார். அதாவது ஆர்.கே நகர், சென்னி அம்மன் கோயில் குடியிருப்பு பகுதியில் சேதமடைந்த வீடுகளை 18 மாதத்திற்குள் புதிதாக கட்டி தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். தற்போது 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என டிவிட்டியிருந்தார்.

அவரது இந்த டிவிட்டுக்கு வாழப்பாடி ராமமூத்தியின் மகன் ராம சுகந்தன் பதிலடி கொடுத்துள்ளார். அதாவது இதைப் பற்றி உங்களுக்கு தேர்தல் தேதி அறிவித்த பின்னர்தான் ஞாபகம் வருகிறதா ? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இத்தனை நாட்கள் நீங்கள்தானே மறைமுகமாக ஆட்சி செய்து கொண்டிருந்தீர்கள், அப்போது இதனை சரி செய்திருக்கலாமே !! என தமிழிசையை அவர் சாடியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+