சகாயம்: உயர் நீதிமன்ற கண்டனத்திற்கு பிறகாவது தமிழக அரசு திருந்த வேண்டும் – ராமதாஸ்

அவருடைய அறிக்கையில் "தமிழ்நாட்டில் நடைபெற்ற கிரானைட் மற்றும் தாது மணல் ஊழல் குறித்து விசாரிக்க இ.ஆ.பெ அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்ற நீதிமன்ற ஆணையை செயல்படுத்தத் தவறியதற்காக தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, தமிழக அரசுக்கு ரூபாய் 10,000 அபராதம் விதித்தும் நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர். தமிழக அரசை உயர்நீதிமன்றம் கண்டித்திருப்பதோ, அபராதம் விதித்திருப்பதோ எந்த வகையிலும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ தரவில் லை.
ஏனெனில், தமிழகத்தின் மிகப்பெரிய ஊழலாக உருவெடுக்க இருக்கும் இம்முறைகேடுகள் குறித்து விசாரித்து உண்மைகளை வெளிக்கொண்டு வரவும், இதற்கு காரணமானவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கவும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாறாக, உண்மைகளை மறைப்பதிலும், ஊழல்வாதிகளை காப்பாற்றுவதிலும் தான் தீவிரம் காட்டியது. கனிம ஊழல் குறித்து விசாரிக்க அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டு, அதை உச்சநீதிமன்றம் உறுதி செய்த பிறகும் சகாயம் குழு விசாரணைக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு அளிப்பதற்கு மாறாக முட்டுக்கட்டைகளைத் தான் போட்டது.
கிரானைட் ஊழலும், தாதுமணல் ஊழலும் புதிதாக நடைபெற்ற ஊழல் அல்ல. பல ஆண்டு களாகவே இந்த ஊழல்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆட்சியின் போது, எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த ஜெயலலிதா, மேலூர் பகுதியில் நடைபெறும் கிரானைட் கொள்ளை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். சட்டப்பேரவைத் தேர்தலின்போதும் கிரானைட் ஊழலை முன்வைத்தே தென்மாவட்டங்களில் ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார்.
அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் தொழில்துறை அமைச்சராக பதவியேற்ற எஸ்.பி. வேலுமணி, கிரானைட் ஊழல் குறித்து திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டதுடன், அதற்குக் காரணமான வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். ஆனால், இருவருமே அவர்கள் வகித்து வந்த பதவிகளிலிருந்து நீக்கப்பட்டது தான் நடந்ததே தவிர, கிரானைட் கொள்ளையர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அதன் முதல்கட்டமாக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து, நாளை மறுநாளுக்குள் இ.ஆ.ப அதிகாரி சகாயம் தலைமையில் குழுவை அமைத்து, கனிம ஊழல் பற்றி விசாரணை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நான் ஏற்கனவே கூறியவாறு, இப்போது தமிழக அரசை நீதிமன்றம் தண்டித்துள்ள நிலையில், வெகுவிரைவில் பொதுமக்களும் தண்டிப்பார்கள் என்பது உறுதியாகும்" என்று தெரிவித்துள்ளார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications