For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீதிமன்ற உத்தரவை மீறி எம்ஜிஆர் விழாவில் பள்ளி மாணவர்கள்? ஆதாரங்களை வெளியிட்ட ராமதாஸ்

சேலத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு மாணவர்கள் அழைத்து வரப்பட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: உயர்நீதிமன்ற உத்தரவை மீறி எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு மாணவர்கள் அழைத்து வரப்பட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு பள்ளி மாணவர்களை அழைத்து செல்ல சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் தடை விதித்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் சேலம் கருப்பூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது.

Ramadoss accuses that School students taken for the MGR function

இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் சேலம் எம்ஜிஆர் விழாவுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பை மீறி பள்ளி மாணவர்கள் அழைத்து வரப்பட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு ஆதாரமாக மாணவர்கள் மற்றும் வாகனங்கள் இருக்கும் புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ராமதாஸ் நீதிபதிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேபோல் முதல்வரும் துணை முதல்வரும் திடீரென திருப்பதி கோவில் சென்று வழிபடுவது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். விடை தெரிந்தவர்கள் சொல்லலாம்! என்றும் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

English summary
PMK founder Ramadoss accuses that School students taken for the MGR function. He has released the photos of that.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X