ஏழரை கோடி பேரின் நாக்குகளையும் அறுக்க வேண்டியிருக்குமே! தெம்பிருக்கிறதா.. ராமதாஸ் கேள்வி

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஏழரை கோடி பேரின் நாக்குகளையும் அறுக்க வேண்டியிருக்குமே! தெம்பிருக்கிறதா?.. ராமதாஸ்..வீடியோ

    சென்னை: ஏழரை கோடி பேரின் நாக்குகளையும் அறுக்க வேண்டியிருக்குமே அமைச்சருக்கு தெம்பிருக்கிறதா என ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

    தேனி, புதுக்கோட்டை, தஞ்சை என மாவட்ட தலைநகரங்களில் அதிமுக கண்டன பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் துரைக்கண்ணு பேசுகையில் யாரை பார்த்து லஞ்ச ஆட்சி என்கிறாய், குற்ற ஆட்சி என்கிறாய், தவறாய் பேசுகிறாய். தப்பாய் பேசினால் நாக்கை அறுத்துவிடுவோம். ஜாக்கிரதையாக இருங்கள்.

     Ramadoss asks that ADMK Minister has guts to cut down tongues of 7 crore

    இது உத்தமர்களின் ஆட்சி. ஜெயலலிதா வழியில் பொற்கால ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதா என்னென்ன செய்ய வேண்டும் என எண்ணினார்களோ அதனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் செய்து வருகின்றனர் என்று கூறி சர்ச்சையை கிளப்பினார்.

    இதுகுறித்து ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் அதிமுக ஆட்சியை லஞ்ச ஆட்சி என தவறாக பேசுபவர்களின் நாக்கை அறுத்து விடுவேன்: அமைச்சர் துரைக்கண்ணு - அப்படியா... மொத்தம் ஏழரை கோடி பேரின் நாக்குகளை அறுக்க வேண்டியிருக்கும். அந்த அளவுக்கு தெம்பும், துணிச்சலும் ஊழல் அமைச்சருக்கு உண்டா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+