அரசு சார்பில் இயக்கப்படும் இலவச பஸ்களில் முதல்வர் ஜெயலலிதா படம் - ராமதாஸ் கண்டனம்
சென்னை: தமிழக அரசு சார்பில் இலவசமாக இயக்கப்படும் பஸ்களில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் படம் ஒட்டப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மக்கள் கோட்டூர்புரம் கோட்டூர் கார்டன் பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான ஏ.பி.சி.டி. விளையாட்டுத் திடலில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள, அவர்களை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நேற்று மாலை சந்தித்து குறைகளை கேட்டு ஆறுதல் கூறினார்.

பின்னர் பாமக சார்பில் அவர்களுக்கு உணவு, குடிநீர், போர்வை உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், ‘‘மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டது. சென்னையின் அனைத்து பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாமக சார்பில் உணவு, குடிநீர், போர்வை, அடுப்பு உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு முழுவதும் பாமக கட்சித் தொண்டர்கள் மூலம் சேகரிக்கப்பட்ட உணவு மற்றும் உதவிப் பொருட்கள் லாரிகள் மூலம் சென்னை மற்றும் கடலூர் கொண்டு செல்லப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பாதிப்பிலிருந்து மக்கள் முழுமையாக மீளும் வரை இந்த உதவிகள் தொடரும்'' என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், சென்னையில் அரசு சார்பில் இலவசமாக இயக்கப்படும் பேரூந்துகளில் முதல்வர் ஜெயலலிதாவின் படம் ஒட்டப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. உணவுப் பொருட்களில் ஜெயலலிதாவின் படங்கள் கட்டாயமாக ஒட்டப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து நான் அறிக்கை வெளியிட்ட போது, அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், ஜெயலலிதாவின் படம் கட்டாயமாக ஒட்டப்படுவதற்கும், அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எவரேனும் கட்டாயப்படுத்தி ஜெயலலிதா படங்களை ஒட்ட முயன்றால் அவர்கள் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.
இப்போது அரசுப் பேரூந்துகளில் ஜெயலலிதாவின் படங்கள் ஒட்டப்பட்டிருப்பது குறித்து போக்குவரத்து அமைச்சர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை நிவாரணப் பணிகளை விமர்சித்த நடிகர் கமலஹாசனை மிரட்டும் வகையில் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. கமலஹாசனின் விமர்சனத்திற்கு பதிலளிப்பதில் காட்டும் வேகத்தை நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் காட்ட வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்தார்.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications