சுவாதி கொலையாளியை 8 நாளில் கண்டுபிடித்த போலீசால் மதனை இன்னமும் பிடிக்க முடியவில்லையா? ராமதாஸ்
சென்னை: சாப்ட்வேர் இன்ஜினியர் சுவாதியை கொலை செய்த கொலையாளியை 8 நாளில் கண்டுபிடித்த போலீசால் மாயமான வேந்தர் மூவிஸ் மதனை 2 மாதமாகியும் கைது செய்ய முடியாதது ஏன்? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையிலுள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் மற்றும் திருச்சியிலுள்ள சென்னை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் சீட் பெற்றுத் தருவதாகக் கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களிடமிருந்து வேந்தர் மூவிஸ் மதன் பணம் வசூலித்ததாக வெளியான புகாரை சுட்டிக்காட்டியுள்ளார்.
மே மாத இறுதியில் மதன் தலைமறைவாவதற்கு முன்னர் எழுதிய கடிதத்தில், அந்தப் பணத்தை எஸ்.ஆர்.எம். பல்கலை வேந்தர் பச்சமுத்துவிடம் ஒப்படைத்து விட்டதாக தெரிவித்ததையும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
எஸ்.ஆர்.எம். மோசடி: குற்றவாளிகளை
— Dr S RAMADOSS (@drramadoss) July 30, 2016
நெருங்க தமிழக அரசு தயங்குவது ஏன்? https://t.co/e6w9TfLlV7
மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் தெரிவித்துள்ள புகாரில், எஸ்.ஆர்.எம். பல்கலை வேந்தர் பச்சமுத்து கூறிய ஒரே காரணத்திற்காகவே, வேந்தர் மூவிஸ் மதனிடம் பணம் கொடுத்ததாக புகார் அளித்துள்ளதாகவும் ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், இந்தப் புகார் தொடர்பாக பச்சமுத்துவிடம் விசாரணை நடத்த தமிழக அரசும், காவல்துறையும் தயங்குவது ஏன்? என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை எனவும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்துப் பிரச்னைகளிலும் எதிரெதிர் நிலைப்பாட்டை எடுக்கும் திமுகவும், அதிமுகவும், எஸ்.ஆர்.எம். மோசடியில் வாய் மூடி மவுனியாக இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இப்பிரச்னையில், தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க தயங்கினால், உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications