ஓபிஎஸ் முதல் ஸ்டாலின் வரை- பிட்டு, பிட்டாய் டுவிட் போட்டு தெறிக்க விட்ட ராமதாஸ்
சென்னை: பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் உறவினருக்கு பொதுப்பணித்துறையின் நீர்வளத்துறையில் பதவி நீட்டிக்கப்பட்டுள்ளதை பாமக நிறுவனர் ராமதாஸ் டுவிட்டரில் வன்மையாக கண்டித்துள்ளார்.
தமிழக அரசியலில் அறிக்கை வெளியீட்டில் கலந்து கட்டி கவனம் செலுத்தி வருகின்ற பாமக நிறுவனரான ராமதாஸின் சமூக வலைதள டுவிட்டர் பக்கத்தில் தற்போது நறுக், சுறுக் டுவிட்டுகள் இடம் பிடித்து வருகின்றன.
அவற்றில் ஆளும் கட்சியைக் குறிவைக்கும் டுவிட்டுகளும், வெள்ள நிவாரணப் பணிகள் குறித்தும் டுவிட்டுகள் இடம்பெற்று வருகின்றன.
|
உங்க லட்சணம் இதுதானா:
முதலாவதாக வெள்ளைத்தை மையமாக வைத்து "சென்னையில் தொற்றுநோய்க்கு இருவர் சாவு: துப்புரவு பணிகளை தமிழக அரசு மேற்கொள்ளும் லட்சணத்துக்கு இது தான் உதாரணம்" என்று சாடியுள்ளார்.
|
பிட் அடிக்கலை.. புல் புக்காம்:
திமுகவையும் விட்டு வைக்காமல், "பா.ம.க. திட்டங்களை நான் பிட் அடிப்பதில்லை:மு.க.ஸ்டாலின்-உண்மை தான்...ஒட்டுமொத்த புத்தகத்தையும் பார்த்து படிக்கிறதை ஒப்புக்கொள்கிறார் போலும்" என்று குட்டு வைத்துள்ளார்.
|
ஸ்டிக்கர் வழங்கப்படும்:
அதன்பின்னர் ஸ்டிக்கர் அரசியல் குறித்து, "2016 ஆம் ஆண்டும் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படாது: இந்த ஆட்சியில் ஸ்டிக்கர்கள் மட்டும் தான் வழங்கப்படும் போலிருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
|
பேரழிவுக்கு வழிகோலும்:
ஹைலைட்டாக, "ஓ.பி.எஸ் உறவினருக்கு நீர்வளத்துறை ஆலோசகராக பணி நீட்டிப்பு:இன்னும் பல செம்பரம்பாக்கம் பேரழிவுகளை நிகழ்த்த திட்டம் வைத்திருக்கிறார்கள் போலும்" என்று நறுக் டுவிட்டுடன் முடித்துள்ளார்.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications