டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணிக்கு இரு தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது.. ராமதாஸ் அதிருப்தி
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணிகளுக்கு முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு நடத்துவது நியாயமற்றது என பாமக நிறுவனர் ராமதாஸ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி குரூப்4, குரூப் 2ஏ தேர்வுகளில் நடந்த முறைகேடு தொடர்பாக பலரும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். சிபிசிஐடி இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் விட்டுவிட்டு அதை பின்னர் முறைகேடாக நிரப்பி அதன் மூலம் அவர்கள் வெற்றி பெற்றதாக சந்தேகங்கள் எழுந்துள்ளது.
இதையடுத்து டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் குரூப் II-ஏ தேர்வுகளுக்கான நடைமுறையில் சில அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஒரு தேர்வு தான் நடந்த வந்தது ஆனால் இனிமேல் காலங்களில் முதல்நிலை (பரிலிம்ஸ்)மற்றும் முதன்மை (மெயின்ஸ்) கொண்ட இருநிலைகள் கொண்டதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறைகேடுகளைத் தடுக்க டிஎன்பிஎஸ்சி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. அதேநேரத்தில் 4-ஆம் தொகுதி பணிகளுக்கு முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது. இந்த முடிவை மாற்ற வேண்டும்!
— Dr S RAMADOSS (@drramadoss) February 16, 2020
மேலும், இனி டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் (எந்த தேர்வாக இருந்தாலும் சரி ) கேட்கப்படும் மல்டிபில் சாய்ஸ் கேள்விகளுக்கு கட்டாயம் பதில் அளித்திருக்க வேண்டும் என்ற விதிமுறையும் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டவிட்டர் பதிவில் ''தேர்வு முறைகேடுகளைத் தடுக்க டிஎன்பிஎஸ்சி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. அதேநேரத்தில் 4-ஆம் தொகுதி பணிகளுக்கு முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது. இந்த முடிவை மாற்ற வேண்டும்'' என்று வலியுறுத்தி உள்ளார்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications