ராமஜெயம் கொலை வழக்கு: சி.பி.ஐ உதவியுடன் சி.பி.சி.ஐ.டி நடத்தும் உண்மை கண்டறியும் சோதனை
சென்னை: ராமஜெயம் கொலை வழக்கில் 11 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்கு சி.பி.ஐ போலீசார் உதவி செய்யப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். பிரபல தொழில் அதிபரான இவர் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார்.
கொலையாளிகள் ராமஜெயத்தின் உடலை கட்டு கம்பியால் கட்டி திருவளர்ச்சோலை அருகே முட்புதரில் வீசி சென்றனர். தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கு குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் வழக்கில் முன்னேற்றம் இல்லாததால், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது. 12 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படையினர் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள்.

அக்டோபர் 21 வரை கெடு
3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் கொலையாளிகள் பற்றிய துப்பு கிடைக்கவில்லை. அக்டோபர் 21ம் தேதிக்குள் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என ஹைகோர்ட், சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கெடு விதித்தது. இதைத்தொடர்ந்து சி.பி. சி.ஐ.டி. போலீசார் கடைசி கட்ட முயற்சியில் இறங்கி உள்ளனர்.

ஆயிரம் பேரிடம் விசாரணை
ராமஜெயம் தொழில் போட்டி, அரசியல் விரோதம், கட்ட பஞ்சாயத்து பிரச்சினை, பெண் விவகாரம் போன்ற ஏதாவது ஒரு பிரச்சினையில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது. இது தொடர்பாக ராமஜெயத்தின் உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள், நண்பர்கள், நடிகர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், சுமார் ஆயிரம் பேரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர்.

சந்தேக வளையம்
இதில் சந்தேக வட்டத்திற்குள் வந்த குறிப்பிட்ட நபர்களை மட்டும் 3 வருட இடை வெளியில் விசாரித்த போது சிலர் மாற்றி மாற்றி தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதேபோன்று கடந்த 3 வருடமாக சிலர் நடவடிக்கைகளை சி.பி.சி. ஐ.டி. போலீசார் கண்காணித்த போதும் சிலர் சந்தேக வட்டத்திற்குள் வந்துள்ளனர். இந்த சந்தேக வட்டத்திற்குள் வந்த 11 பேரை உயர்நீதிமன்ற நீதிபதி ஆலோசனைபடி அறிவியல் ரீதியான விசாரணைக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் உட்படுத்தப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உண்மை கண்டறியும் சோதனை
உண்மை கண்டறியும் சோதனை எனப்படும் ‘நார்கோ அனாலிசிஸ்' என்ற பரிசோதனை 11 பேருக்கும் நடத்தப்பட உள்ளது. இதற்காக உயர்நீதிமன்ற அனுமதி பெற்றுள்ள சி.பி.சி.ஐ.டி போலீசார் முதற்கட்டமாக 3 பேருக்கு சோதனை செய்ய உள்ளனர். சென்னையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் இந்த சோதனை நடைபெற உள்ளது.

பழைய நினைவுகள்
உண்மை கண்டறியும் சோதனையில் பரிசோதனை செய்யப்படுபவர்கள் ஊசி மருந்து மூலம் பாதி மயக்க நிலைக்கு கொண்டு செல்லபடுவார்கள். மனித மூளையில் பொட்டு மூளை எனப்படும் ‘டெம்போரல்' பகுதியில் நிகழ்கால நினைவுகள் பதிவாகி இருக்கும்.

வீடியோவில் பதிவு
‘ஹிப்போ காம்பஸ்' என்று அழைக்கப்படும் மூளை பகுதியில் பழைய நினைவுகள் பதிவாகி இருக்கும். ஆழ்ந்த நிலைக்கு செல்லும் மனிதர்களின் நினைவுகளை சி.பி.சி.ஐ.டி போலீசார் தங்களுக்கு வேண்டிய கேள்விகளை கேட்டு வீடியோவில் பதிவு செய்து கொள்வார்கள்.

விடை தெரியும்
பாதி மயக்க நிலையில் உள்ள நபர் தனது மூளையில் பதிவாகி உள்ள நினைவுகள் அனைத்தையும் மறைக்காமல் கூறிவிடுவார்கள். ராமஜெயம் கொலை வழக்கில் எழுந்துள்ள சந்தேகங்கள், விடை தெரிய வினாக்கள், அனைத்தும் இந்த உண்மை கண்டறியும் சோதனை மூலம் வெளியே வந்து விடும். இதன் மூலம் குற்றவாளிகள் பிடிபடுவார்கள்.

மர்மம் விலகும்
சென்னையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் இந்த சோதனை நடத்தப்பட இருப்பதாக சி.பி.சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்தன. சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் இந்த கடைசி கட்ட முயற்சி ராமஜெயம் கொலையில் 3 வருடங்களாக உள்ள மர்மத்தை வெளியே கொண்டு வரும் என கூறப்படுகிறது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications