காரைக்குடி இராமநாதன் செட்டியார் பள்ளியில் விருது வழங்கும் விழா
காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியின் 4ஆம் ஆண்டு விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது.
காரைக்குடி: இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியின் 4ஆம் ஆண்டு விருது வழங்கும் விழா நாளை L.CT.L பழனியப்ப செட்டியார் நினைவரங்கத்தில் நடைபெற உள்ளது.
விழாவில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றவர்களுக்கும், 100 சதவிகிதம் தேர்ச்சி அளித்த ஆசிரியர்களுக்கும், சிறந்த மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. சிறந்த வகுப்பறைக்கான விருது, சிறந்த கிளப் விருதும் விழாவில் வழங்கப்பட உள்ளது.

சிவகங்கை மாவட்ட தலைமை கல்வி அதிகாரி ஜெ. ஏஞ்சலோ இருதயசாமி. திரு ஏ. மாரிமுத்து தேவகோட்டை கல்வி அதிகாரி. புதுக்கோட்டை கல்வி மாவட்ட அதிகாரி சாமி சத்தியமூர்த்தி ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசு வழங்க உள்ளனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் எஸ். சுப்பையா பங்கேற்க உள்ளார். கே.ஆர். ராமசாமி எம்எல்ஏவும் விழாவில் பங்கேற்று சிறப்புரை ஆற்ற இருக்கிறார்.
அனைவரும் வருகை புரிந்து விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றார் பள்ளி தலைமை ஆசிரியர்.












Click it and Unblock the Notifications