இப்படியெல்லாம் சொன்னால் ராஜினாமா செய்துவிடுவேன்- காங் எம்எல்ஏ ராமசாமி கோபம்
சட்டசபையில் விரைந்து பேசுமாறு வற்புறுத்தினால் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்று காங்கிரஸ் எம்எல்ஏ ராமசாமி தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: சட்டசபையில் எனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில்தான் நான் பேச வேண்டும், விரைந்து பேச வற்புறுத்தினால் ராஜினாமா செய்வேன் என்று காங்கிரஸ் எம்எல்ஏ ராமசாமி தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் நேற்று காவல் துறை மற்றும் தீயணைப்பு துறை மீதான மானியக் கோரிக்கை மீது நேற்று விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் ஏராளமான உறுப்பினர்கள் பேசினர்..

அப்போது சட்டசபை காங்கிரஸ் தலைவரும் எம்எல்ஏவுமான ராமசாமி பேசுவதற்கு எழுந்தார்.அப்போது சபாநாயகர் தனபால் சீக்கிரம்பேசி முடிக்குமாறு கூறினார். இதனால் கோபமடைந்த ராமசாமி நான் பேச மாட்டேன் என்று கூறி உட்கார்ந்துவிட்டார்.
அவரை சபாநாயகர் மீண்டும் பேசுவதற்கு அழைத்தார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட விவாதம் பின்வருமாறு:
ராமசாமி: எனக்கு ஒதுக்கிய நேரத்தில்தான் நான் பேச முடியும். 10 நிமிடம் என்றால் என்னால் முடியாது.
சபாநாயகர் தனபால்: நேரம் இல்லை. அதனால்தான் நான் அப்படி சொன்னேன். சபையை முடிக்க வேண்டுமல்லவா.
ராமசாமி: நேரம் கடத்தியது நீங்கள். நாங்கள் அல்ல. நேரம் கடந்து போனதற்கு நீங்கள்தான் பொறுப்பு.
சபாநாயகர்: சரி விரைந்து பேசுங்கள். நீங்கள் இப்படியெல்லாம் பேசக் கூடாது.
ராமசாமி: இப்படியெல்லாம் சொன்னால் நான் ராஜினாமா செய்துவிடுகிறேன். காங்கிரஸ் கட்சியின் சார்பில் நான் ஒருவன்தான் பேசுகிறேன், 10 நிமிடத்தில் பேசுங்கள் என்றால் நான் என்ன பேசுவது.
சபாநாயகர்: சரி நீங்கள் பேசுங்கள்.
இப்படியாக இருவருக்குள்ளும் விவாதம் நடைபெற்றது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications