ராம்குமார் நலம்: ராயப்பேட்டை மருத்துவமனை டீன் தகவல்- இணை ஆணையர் ஆய்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுவாதி கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் நல்ல உடல்நலத்துன் இருக்கிறார் என சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை தலைவர் தெரிவித்துள்ளார். ராம்குமார் அனுமதிக்கப்பட்டுள்ள ராயப்பேட்டை மருத்துவமனையில் இணை ஆணையர் மனோகரன் ஆய்வு மேற்கொண்டர்.

இளம்பெண் சுவாதி கடந்த 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் செங்கோட்டையை அடுத்த மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Ramkumar is well, says GRH dean

ராம்குமாரை போலீசார் பிடிக்க சென்ற போது, அவர் தற்கொலை முயற்சி செய்ததால், அவருக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து, அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் நெல்லையில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்டார்.

சென்னை வந்த அவருக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ராம்குமார் உடல் நலத்துடன் நலமாக இருக்கிறார் என ராயப்பேட்டை அரசு மருத்துவமனை தலைவர் நசீர் அகமது தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவமனை தலைவர் நசீர் அகமது, ராம்குமாரின் உடல்நிலை முன்னேறியுள்ளது. அவர் தற்போது, நலமாக இருக்கிறார். 7 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது. மருத்துவர்களின் அறிவுரைக்குப் பின், அடுத்தகட்ட சிகிச்சை குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

கொலையாளி ராஜ்குமார் சிகிச்சை பெற்று வரும் ராயப்பேட்டை மருத்துவமனையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறி்த்து மருத்துவமனையில் துணை ஆணையர் பெருமாள் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதேபோல ராம்குமார் உடல் நிலை மற்றும் பாதுகாப்பு தொடர்பாக இணை ஆணையர் மனோகரன் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில் பரிசோதனை முடிந்தவுடன் எழும்பூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+