ராம்குமார் உடலைப் பார்க்க வக்கீல்களுக்கு அனுமதி மறுப்பு.. உறவினர்கள் சாலை மறியல்
சென்னை: புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் ராம்குமாரின் உடலைப் பார்க்க அவரது வக்கல்களுக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். இதைக் கண்டித்து வக்கீல்களும், ராம்குமாரின் உறவினர்களும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் இன்று மாலை திடீரென மர்மமான முறையில் மரணமடைந்தார். அவர் மின் கம்பியைக் கடித்துத் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்து காவல்துறை மெளனமாக உள்ளது.

இந்த நிலையில் ராம்குமாரின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவரது உடலைப் பார்க்க வழக்கறிஞர் ராமராஜ் உள்ளிட்ட வக்கீல்கள் வந்தனர். ஆனால் அவர்களை உள்ளே விட போலீஸார் மறுத்து விட்டனர். இதனால் போலீஸாருடன் வக்கீல்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காவல்துறையின் போக்கைக் கண்டித்து வக்கீல்கள் போராட்டம் நடத்தினர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் ராம்குமாரின் மரணத்திற்கு போலீஸாரே காரணம் என்று கூறி ராம்குமாரின் உறவினர்களும், தந்தை பெரியார் தி.கவினரும் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் சாலையை மறித்து அமர்ந்து போராடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸார் அவர்களை சமாதானப்படுத்திய பின்னர் அனைவரும் எழுந்து சென்றனர்.
ராயப்பேட்டை மருத்துவமனை வளாகம் தொடர்ந்து பதட்டமாக உள்ளது. போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications