ராம்குமாருக்கு மயக்கம் தெளிந்தது.. விரைவில் சென்னை கொண்டு வர போலீசார் தீவிரம் !

Subscribe to Oneindia Tamil

நெல்லை: மென்பொறியாளர் சுவாதியை கொலை செய்த ராம்குமாருக்கு மயக்கம் தெளிந்ததையடுத்து, அவரை சென்னை கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை தனிப்படை போலீசார் செய்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த 24ம்தேதி காலை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்ட செய்தி பெரும் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கொலையாளியை தேடி வந்தனர்.

 ramkumar speak to police

இந்நிலையில், கொலையாளி ராம்குமார் நேற்று முன்தினம் இரவு செங்கோட்டை அருகே மீனாட்சிபுரம் கிராமத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டான். இதையடுத்து அவனை போலீசார் கைது செய்ய முயன்ற போது கூர்மையான ஆயுதத்தால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்று தற்போது நெல்லை பாளையங்கோட்டை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ராம்குமாரின் கழுத்தில் எக்ஸ்ரே எடுக்கப்பட்ட பின், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும், அவர் போலீசாரிடம் விரிவாக பேசும் அளவிற்கு உடல்நலன் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இதுகுறித்து மருத்துவமனை டீன் கூறுகையில், ராம்குமார் உடல் நலன் தேற இன்னும் 2 நாட்கள் ஆகும். தெளிவாக அவர் பேசுவதற்கு 7 நாட்கள் முதல் 9 நாட்கள் ஆகலாம் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இதையடுத்து அவரை விரைவில் சென்னை கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை தனிப்படை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக சென்னையிலிருந்து உயர் அதிகாரிகளின் உத்தரவுக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள தனிப்படை போலீசார் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தற்போது அறுவை சிகிச்சைக்குப்பின் மயக்கம் தெளிந்த நிலையில் இருந்த ராம்குமார் பேச ஆரம்பித்தான். அவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே போலீசாரின் கேள்விக்குப் பதில் அளிப்பதைப் போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் பரவ தொடங்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+