தமிழ்நாடு முழுவதும்.. நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.. தலைமை காஜி அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை (சனிக்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி சலாவூதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.
இஸ்லாமிய மக்களின் மிக முக்கியமான பண்டிகை ரம்ஜான் ஆகும். ஈகைத் திருநாளாக கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகை இஸ்லாமிய நாட்காட்டியின் படி ஒன்பதாவது மாதமாக வரும் ரமலான் மாதத்தில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. ரமலான் நோன்பு கடைபிடிப்பது இஸ்லாமியர்களின் ஐந்து கோட்பாடுகளில் ஒன்றாகும்.

ரம்ஜான் என்று அழைக்கப்படும் நோன்பு பெருநாள் பண்டிகை ரமலான் மாதம் 29 அல்லது 30 நாட்கள் நோன்பு நோற்ற பிறகு உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. ஈகைத் திருநாள் என்று தமிழ் மக்களால் அழைக்கப்படும் இந்த நாளில் ஏழை மக்களுக்கு அரசி அல்லது கோதுமை போன்ற பொருட்களை இஸ்லாமியர்கள் வழங்க வேண்டும்.
அரபு மாதங்களில் ரமலானுக்கு அடுத்த மாதமான ஷவ்வாலின் முதல் நாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். பிறை தென்படுவதன் அடிப்படையில் ரமலான் மாதம் 29 நாட்களா அல்லது 30 நாட்களா என்பது முடிவு செய்யப்படுகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் நாளை (ஏப்ரல் 22) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசு தலைமை காஜி சலாவூதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை காஜி சலாவூதீன் முகமது அயூப் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "ஷாவ்வால் மாத பிறை இன்று (வெள்ளிக்கிழமை) மாலை தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காணப்பட்டது. எனவே நாளை (சனிக்கிழமை) தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறதது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications