ராணிப்பேட்டையில் அரசு பண்ணைகள்.. பாலாற்றங்கரையில் இரவு நேரம் தனிமையில் சந்திக்க வந்த ஜோடி! என்னாச்சு
ராணிப்பேட்டை: இளம் பெண் ஒருவர், ஒரு கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரம் உத்தரப்பிரதேசத்தில் நேற்றைய தினம் நடந்துள்ளது.. அந்த பெண்ணை பலாத்காரம் செய்த இளைஞர்கள், மயக்க நிலையில் இருந்த அந்த பெண்ணின் முன்பாக நடனமாடி கொண்டாடியுள்ளனர். நடனமாடும்போதும், அந்த பெண்ணை தகாத முறையில் தீண்டியுள்ளனர். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி, பலருக்கும் அதிர்ச்சியை தந்து வருகிறது. அந்த இளைஞர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில், நம்முடைய ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு கொடுமை நடந்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருலுள்ள பகுதியில் வசித்து வருகிறார் அந்த இளம்பெண்.. 19 வயதாகிறது.. இவர் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று காதலர்கள் இருவரும் நேரில் சந்தித்து பேச முடிவு செய்தனர்.. இதற்காக காதலியை அவருடைய வீட்டிலிருந்து பைக்கில் அழைத்து வந்துள்ளார் காதலன்.. வாலாஜாவை அடுத்த தெங்கால் பாலாறு மேம்பாலம் வழியாக இரவு நேரத்தில் பைக்கில் வந்த காதலர்கள், வழியில் ராணிப்பேட்டையை அடுத்த நவ்லாக் அருகே பைக்கை நிறுத்திவிட்டு சாலையோரத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர்.
தங்க நகைகளை பறித்த கும்பல்
அப்போது அந்த வழியாக வந்த 3 இளைஞர்கள், காதலர்களை நோட்டமிட்டனர்.. சாலையோரத்தில் அவர்களுடன் வேறு யாரும் இல்லை என்பதை உறுதிசெய்து கொண்ட 3 பேரும், காதலர்களை மடக்கி வேண்டுமென்றே வாக்குவாதம் செய்தனர். பிறகு திடீரென அவர்கள் அந்த அணிந்திருந்த நகைகளை பறித்தனர்.. இருவரிடமிருந்த பணத்தையும் அபகரித்து கொண்டனர்.
பிறகு, கண்ணிமைக்கும் நேரத்தில், காதலனை 3 பேரும் சேர்ந்து சரமாரியாக தாக்க துவங்கிவிட்டார்கள்.. இதனால் நிலைகுலைந்து காதலன் விழவும், அப்பெண்ணை வலுக்கட்டாயமாக அங்கிருந்து தூக்கிசென்று 3 இளைஞர்களும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பிறகு 3 பேருமே அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
3 பேரும் சிக்கினார்கள்
இதனால் அதிர்ச்சியடைந்த காதல் ஜோடி, நடந்த கொடுமையை தங்களுடைய உறவினர்களிடம் தெரிவித்தனர்.. பின்னர் இளம்பெண் தரப்பில் போலீசில் புகாரும் தரப்பட்டது.. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த 3 இளைஞர்களையும் வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில், சிப்காட் அருகே அவரக்கரை பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் சுற்றித்திரிந்த நிலையில், அவர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது அந்த மூவரும் தான் என்பது உறுதியானது.. இதைத்தொடர்ந்து ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 இளைஞர்களையும் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.
பண்ணை பாலாற்றங்கரை
வாலாஜா ஒன்றியத்திற்குட்பட்ட நவ்லாக் பகுதியில் அரசு பண்ணைகள் இயங்கி வருகிறது. இந்த பண்ணை அருகே பாலாறு செல்கிறது. நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு நவ்லாக் அருகே உள்ள பாலாற்றங்கரையையொட்டி, இந்த காதல் ஜோடி தனியாக பேசிக்கொண்டிருந்தார்களாம். இது ஆள் அரவமற்ற இடம் என்பதுடன், ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ளதால், இந்த பகுதியில் நிறைய சமூக விரோத செயல் அதிகம் நடப்பதாக சொல்கிறார்கள்.
திரண்டு வந்த 50 பேர்
காதலனை மயக்கம் வரும் அளவுக்கு அடித்து கீழே சாய்த்துவிட்டு, அதற்கு பிறகு இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.. அவர்களிடம் இருந்து தப்பிய இளம்பெண் அருகே வசிக்கும் மக்களிடம் கூறியுள்ளார். அங்கு, 50க்கும் மேற்பட்டோர் சென்றபோது, அதற்குள் 3 பேரும் தப்பி ஓடிவிட்டார்களாம்..
மயங்கி கிடந்த காதலன், பாதிக்கப்பட்ட பெண் இருவரையும் வேலுார் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் அனுமதித்திருக்கிறார்கள். இதற்கு பிறகே, இளம்பெண் தன்னுடைய உறவினர்களை சந்தித்து முறையிட்டு, அதற்கு பிறகு போலீசுக்கு சென்றிருக்கிறார். தற்போது கைதான 3 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications