அரக்கோணம் விநோதம்.. ரயில்வே ஸ்டேஷனில்.. நாய் போல குரைத்து இங்குமங்கும் ஓடிய நபர்.. ராணிப்பேட்டை பரபர
ராணிப்பேட்டை: அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில், இளைஞர் ஒருவரால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனுக்கு, நேற்று வட மாநில இளைஞர் ஒருவர் வந்திருந்தார்.. ஸ்டேஷனுக்குள் நுழைந்ததுமே, ஒரு இடத்தில் உட்காராமல் அங்குமிங்கும் சுற்றிக்கொண்டேயிருந்தார்..

அரக்கோணம்: நாற்காலிகள் இருந்தும்கூட அந்த இளைஞர், ஸ்டேஷனுக்குள் நடந்து கொண்டிருப்பதை அங்கிருந்த மக்களும் கவனித்தனர். பிறகு திடீரென அந்த இளைஞர் நாயை போல குரைக்க ஆரம்பித்தார்.. பிறகு மற்ற விலங்குகள் நடப்பது போலவே, பிளாட்பாரத்தில் நடக்க ஆரம்பித்தார்.. பிறகு, பிளாட்பாரத்தில் வைக்கப்பட்டிருக்கும் குழாயில் வந்த தண்ணீரை வித்தியாசமாக குடிப்பது போன்று பாவனைகள் செய்தார்.
இந்த இளைஞர், ஒவ்வொரு நிமிடமும், புதுபுது சேஷ்டைகளை செய்து கொண்டிருப்பதை பார்த்து அங்கிருந்த பயணிகளும், ரெயில்வே ஊழியர்களும் பயந்துபோனார்கள்.. ஒருவேளை அந்த வட மாநில இளைஞர் திடீரென தங்களிடமும் வந்து ஏதாவது செய்துவிடுவோரா? என்று அச்சம் கொண்டனர்.. பிறகு பெட்டி படுக்கைகளுடன் அங்கிருந்து மெல்ல நகர துவங்கினார்.
கையில் லத்தி: இதற்கு பிறகு, ரெயில்வே போலீசார் அந்த இளைஞரிடம் சென்றனர்.. கையில் லத்தியுடன் போலீசார் வருவதை பார்த்ததுமே, அந்த வட மாநில இளைஞர் அங்கிருந்து வேகமாக ஓடினார்.. ஒரே ஓட்டமாக ஓடி, ரெயில்வே அதிகாரி ஆபீசிற்குள் புகுந்துவிட்டார்.. எனவே, போலீசாரும் அந்த அலுவலத்துக்குள் நுழைந்தனர். ஆனால், அந்த இளைஞர் அங்கே காணவில்லை.
அங்கிருந்த பெட் கவர் போடப்பட்டிருந்த மேஜையின் அடியில் படுத்துக்கொண்டார். பிறகு போலீசார் அந்த பெட்கவரை மெல்ல விலக்கி பார்த்து, அவரை வெளியே அழைத்து வந்தனர்.. அவரிடமிருந்து ஒரு பையையும் ரெயில்வே போலீசார் ஆய்வு செய்தனர்.. ஒரு துண்டு சீட்டில் செல்போன் நம்பர் இருந்தது.. உடனே அந்த நம்பருக்கு போலீசார் போன் செய்தார்கள்.
பரிசோதனை: செல்போனில் பேசியவர் வடமாநில இளைஞர் தன்னுடைய தம்பி என்று சொன்னார்.. உடனே போலீசார் அவரை சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர்.. வடமாநில இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு இருக்கலாம் என கருதி ரெயில்வே டாக்டரை வரவழைத்து பரிசோதனையும் செய்தனர். ஆனால், ரெயில்வே டாக்டர் அந்த இளைஞரை பரிசோதித்துவிட்டு,
வடமாநில இளைஞருக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.. நன்றாக தான் உள்ளார், ஏதாவது விரக்தியில் இப்படியெல்லாம் செய்திருக்கலாம் என்றார். இதனிடையே, இளைஞரின் அண்ணன் ரயில்வே ஸ்டேஷன் வந்துசேர்ந்தார். அவரிடம் நடந்தவைகள் பற்றி ரெயில்வே போலீசார் சொல்லி, இளைஞரை பற்றி விசாரித்தார்கள்..
அரக்கோணம்: அந்த இளைஞர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவராம்.. பிரபு குமார் ஷர்மா என்பது அவரது பெயராகும். பீகாரில் வேலை வாய்ப்பு எதுவும் இல்லாததால், அண்ணனை தேடி அரக்கோணம் வந்துள்ளது தெரியவந்தது.. ஆனால், இளைஞர் ஏன் இப்படியெல்லாம் சேஷ்டைகள் செய்கிறார் என்று போலீசார் கேட்டதற்கு, தனக்கு எதுவும் தெரியாது என்கிறாராம் அண்ணன்.
பிறகு, அண்ணனிடம் கடிதம் மூலம் எழுதி வாங்கிக்கொண்டு ரெயில்வே போலீசார், தம்பியை அவருடன் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அரக்கோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.












Click it and Unblock the Notifications