சிலோன்காரி ன்னு சொன்னாங்களாம்.. ராணிப்பேட்டையின் பெரியம்மா இவங்கதான்.. புஷ்பராணி பண்ண வேலை இருக்கே
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை புஷ்பராணி செய்த காரியம் தெரியுமா? குழந்தை என்றுகூட யோசிக்கவில்லை.. முன்விரோதம் ஒரு கொலை வரை சென்று, ஒட்டுமொத்த பொதுமக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. செட்டித்தாங்கல் பகுதியில் என்ன நடந்தது? யாரிந்த புஷ்பராணி? ராஜேஸ்வரி? இந்த வழக்கு தொடர்பாக ராணிப்பேட்டை நீதிமன்றம் தந்துள்ள தீர்ப்பு என்ன?
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டம் செட்டித்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் காந்தி.. இவரது மனைவி ராஜேஸ்வரி .. இந்த தம்பதிக்கு 13 வயதில் தனுஷ் மற்றும் மூன்றரை வயதில் கோபிகா என்று 2 பிள்ளைகள் இருக்கிறார்கள். காந்தியின் சகோதரர் பெயர் சேட்டு.. இவரது மனைவி 48 வயது புஷ்ப ராணி..

குடும்ப பகை - தகராறு
இவர்கள் அனைவருமே ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். ராஜேஸ்வரிக்கும், புஷ்ப ராணிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு எழுந்து வந்தது.. இதனால், இவர்களின் முன்விரோதம் தொடர்ந்து கொண்டே வந்தது...
இந்நிலையில், கடந்த 2020 நவம்பர் 30ம் தேதி, கோபிகா வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த நிலையில், திடீரென காணாமல் போய்விட்டாள். இதனால் பதறிப்போன பெற்றோர், குழந்தையை எங்கெங்கோ தேடினார்கள். இறுதியில் ராணிப்பேட்டை போலீசில் புகார் தந்தார்கள். இந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் புஷ்பராணியை பிடித்து விசாரணை நடத்தினார்கள்..
சிலோன்காரி
அப்போதுதான், அந்த பகுதியிலுள்ள கிணற்றில் சிறுமியை, புஷ்பராணி வீசி கொன்றது தெரியவந்தது. இதையடுத்து, தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் கிணற்றில் இருந்து சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. பிறகு புஷ்பராணியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.. அதில், பல்வேறு தகவல்களை போலீசில் வாக்குமூலமாக கூறினார்..
அதாவது, மூன்றவரை வயது கோபிகா, வீட்டு வாசலில் அடிக்கடி சிறுநீர் கழித்ததால் புஷ்பராணிக்கு கோபம் வந்துள்ளது.. ஏற்கனவே ராஜேஸ்வரி மீது தகராறு செய்து கொண்டிருந்த புஷ்பராணி, இதையே சாக்காக வைத்து, மீண்டும் சண்டையிட்டு வந்துள்ளார்.. புஷ்பராணியின் பெற்றோர் இலங்கையை சேர்ந்தவர்களாம்.. இந்த சண்டையில் "சிலோன்காரி" என்று ராஜேஸ்வரி கிண்டலாக சொல்லிவிட்டாராம். இது புஷ்பராணிக்கு மேலும் அதிக ஆத்திரத்தை தந்துள்ளது.
பழிக்குப் பழி
ஒருமுறை புஷ்பராணி விபத்தில் சிக்கி சிகிச்சையிலிருந்தபோதும், மாமியார் உடல்நலம் குன்றியிருந்தபோதும், ராஜேஸ்வரி உடனிருந்து கவனித்து கொள்ளவில்லையாம். இதெல்லாம் சேர்ந்துதான் புஷ்பராணிக்கு ராஜேஸ்வரி மீதான கோபத்தை அதிகப்படுத்தியிருந்தது. அதனால்தான், ராஜேஸ்வரியை பழிவாங்க, குழந்தையை கிணற்றில் வீசி கொன்றதாக புஷ்பராணி பரபரப்பு வாக்குமூலம் தந்திருந்தார்.
இதையடுத்து, இந்த கொலை வழக்குத் தொடர்பான விசாரணை ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.. அதில், புஷ்பராணிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5 வருட கடுங்காவல் தண்டனையும், 5000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி செல்வம் தீர்ப்பு வழங்கினார். இப்போது புஷ்பராணி ஜெயிலில் உள்ளார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications