பொள்ளாச்சியை பதற வைத்த கல்லூரி, பள்ளி மாணவிகள் பலாத்கார சம்பவம்.. முக்கிய குற்றவாளி கைது
Recommended Video

பொள்ளாச்சி: கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த கும்பலை சேர்ந்த முக்கிய நபர் திருநாவுக்கரசு இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில், பேஸ்புக் மூலமாக இளம் பெண்களுக்கு வலைவிரிக்கும் ஒரு கும்பல், பின்னர் அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து அதை செல்போனில் வீடியோவாக எடுத்து மிரட்டி, தொடர்ந்து பலாத்காரம் செய்ததோடு, பணம், நகைகளை பறித்து வந்துள்ளது.
கடந்த 24 ஆம் தேதி பொள்ளாச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை இதுபோல பலாத்காரம் செய்து, அந்த கும்பல் வீடியோ எடுத்தது.

கூட்டாளிகள்
இருப்பினும், துணிச்சலை வரவழைத்துக் கொண்டு அந்தப் பெண்ணின், சகோதரர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார். இதன் பிறகு சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ் ஆகிய மூவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

பல பெண்களுக்கு மிரட்டல்
இந்த கைது நடவடிக்கையை தொடர்ந்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுவரை இவர்கள் 25க்கும் மேற்பட்ட பெண்களை இவ்வாறு மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து வைத்துள்ளது விசாரணையின்போது தெரிய வந்தது. இதில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு தலைமறைவாகி விட்ட நிலையில் அவரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்தனர்.

வீடியோ வெளியிட்ட திருநாவுக்கரசு
இந்த நிலையில் திருநாவுக்கரசு வீடியோ பதிவு ஒன்றை சமூக வலைத்தளம் வழியாக வெளியிட்டார். அதில் பொள்ளாச்சி நகரில் உள்ள முக்கிய பிரமுகர்கள் பலருக்கும் இந்த பலாத்கார சம்பவங்களில் தொடர்பு உள்ளது என்றும் தான் குற்றவாளி இல்லை என்றும் கூறியிருந்தார். இந்த வீடியோ மேலும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசில் புகார் அளித்த கல்லூரி மாணவியின் சகோதரர் மர்ம கும்பலால் தாக்கப்பட்டார்.

அதிரடி நடவடிக்கை
பலாத்காரம், தாக்குதல், கொள்ளை என இந்த விவகாரம் பல்வேறு வகைகளில் விஸ்வரூபம் எடுத்ததால் தமிழ்நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை, பொள்ளாச்சி அருகே, மகினாம்பட்டி என்ற இடத்தில் வைத்து போலீசார் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர். அந்த பகுதியில் திருநாவுக்கரசு நடமாடுவதை அறிந்து, ரகசியமாக பின் தொடர்ந்து சென்ற காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். எனவே இந்த வழக்கு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications