கோவையில் சிக்கிய அரிய வகை பறக்கும் பாம்பு: வியப்பில் மக்கள்
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவையில் அரிய வகை பறக்கும் பாம்பு ஒன்று பிடிபட்டுள்ளது. அந்த பாம்பை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள காளம்பாளையம் கிராமத்தில் அரிய வகை பறக்கும் பாம்பு ஒன்று சிக்கியுள்ளது. 3 அடி நீளமுள்ள அந்த பாம்பு ஒரு மரத்தில் இருந்து மற்றொரு மரத்திற்கு பறந்து பறந்து சென்றது.
பாம்பு ஒன்று பறப்பதை பார்த்த கிராம மக்கள் ஆச்சரியப்பட்டனர். இந்நிலையில் பாம்பு பிடிக்கும் ரஞ்சித்திற்கு இது குறித்து தகவல் அளிக்கப்பட்டது. அவர் வந்து அந்த பாம்பை பிடித்தார். பின்னர் அந்த பாம்பு வனத்துறையினரிடம் அளிக்கப்பட்டது.
இது குறித்து ரஞ்சித் கூறுகையில்,
எங்களுக்கு தெரிந்து பறக்கும் பாம்பை இந்த பகுதியில் இதுவரை யாரும் பிடித்தது இல்லை. இதுவே முதல் முறை ஆகும். இது இலங்கையில் காணப்படும் அரிய வகை பாம்பு ஆகும் என்றார்.












Click it and Unblock the Notifications