கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேசன் அரிசி அதிரடி பறிமுதல்
நெல்லை: கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேசன் அரிசியை கூடங்குளம் அருகே அதிரடியாக போலீசார் கைப்பற்றினர்.
நெல்லையில் உள்ள உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிழக்கு கடற்கரை சாலையில் ரேசன் அரிசி கடத்தல் நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சாமிநாதன் தலைமையிலான போலீசார் இடிந்தகரை கிழக்கு கடற்கரை சாலையில் திடீர் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது நாகர்கோவில் நோக்கி சென்ற ஒரு மினி லாரியை சந்தேகத்தோடு பிடித்து சோதனை நடத்தினர். அதில் மீன் கூடைகளுக்கு கீழே மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 2 ஆயிரம் கிலோ அளவிலான ரேசன் அரிசியை போலீசார் கைப்பற்றினர். மேலும் மினி லாரியையும் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி மினி லாரியின் டிரைவரான நாகர்கோவிலை சேர்ந்த மோகன்ராஜ், ராமசந்திரன் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications