பரோலை ஒரு மாதம் நீட்டியுங்கள்.. தமிழக அரசுக்கு ரவிச்சந்திரன் கோரிக்கை
பரோலை ஒரு மாதம் நீட்டிக்குமாறு ரவிச்சந்திரன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை: பரோலை ஒரு மாதம் நீட்டிக்குமாறு ரவிச்சந்திரன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவிச்சந்திரன் கடந்த 5ஆம் தேதி பரோலில் விடுவிக்கப்பட்டார். பரோலில் விடுவிக்கப்பட்ட ரவிச்சந்திரன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.

இந்நிலையில் பரோலை நீட்டிக்குமாறு ரவிச்சந்திரன் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் "ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கடந்த 27 ஆண்டுகளாகச் சிறையிலிருக்கும் நான், விடுதலைக்குப் பிறகான எனது எதிர்காலத்தை உறுதி செய்யும் பொருட்டு சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையின் உத்தரவின்படி 15 நாள்கள் சாதாரண விடுமுறையில் அருப்புக்கோட்டைக்கு வந்துள்ளேன்.
சென்ற 10 நாள்களாக, ஆண்டுக்கணக்கில் நீடித்து வந்த குடும்பச் சொத்துகள், பாகப்பிரிவினை தொடர்பான நடைமுறைப் பிரச்னைகள், சட்டச்சிக்கல்கள் உற்றார் உறவினர்கள் நண்பர்களுடனான தொடர் கலந்துரையாடலில் சரிசெய்யப்பட்டு வருகின்றன. என் தாயார், (வயது 64) குடும்ப ஓய்வூதியம் பெறும் ஒரு மூத்த குடிமகள் மட்டுமே. எனவே எம் வீட்டில் மராமத்துப் பணி மற்றும் தோட்டத்தில் பயிர்ச்சாகுபடி, மேலாண்மை தொடர்பான பணிகளைச் செய்ய நிதி ஆதாரம் மற்றும் பணியாளர்களை அமர்த்த கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது.
ஆகவே, என் வயதான தாயாரினாலும் தற்போதை சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் எனக்கு ஒருமாதம் பரோல் நீட்டிப்பு வழங்க உரிய ஆணை பிறப்பிக்குமாறு பணிவுடன் தங்களிடம் வேண்டிக்கொள்கிறேன்" இவ்வாறு ரவிச்சந்திரன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications