ஜெ., சொன்னால் எம்.பி.பதவியை ராஜினாமா செய்ய தயார் - சசிகலா புஷ்பா
தூத்துக்குடி: தமிழக முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டால் எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன் என்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.
சென்னையில் என்கவுண்டரில் கொல்லப்பட்ட வெங்கடேஷ் பண்ணையாரின் 13வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடிக்கு வந்திருந்தார் சசிகலா புஷ்பா. பின்னர் திருச்செந்தூர் அருகே உள்ள அவரது நினைவிடத்தில் சசிகலா புஷ்பா அஞ்சலி செலுத்தினார். அவரைக் கைது செய்ய போலீஸாரும் திட்டமிட்டுக் காத்திருந்தனர். ஆனால் உச்சநீதிமன்றம் அதிரடியாக தடை உத்தரவு போட்டதால் போலீசார் அவரை கைது செய்யும் நடவடிக்கையை கைவிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா புஷ்பா, முதலமைச்சர் கேட்டுக்கொண்டால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கொடுத்துவிடலாம். அவர்களுக்கு பின்னால் இருக்கும் இன்னொரு கும்பலுக்காக பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது.
முதலமைச்சர் வயதில் பெரியவர்கள் அதனால் எங்களுக்கு மரியாதை இருக்கிறது. ஆனால் பின்னால் இருந்து ஆட்டி வைப்பவர்களை முதலமைச்சர் தெரிந்து அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். அவர்கள் குடும்பத்தினர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications