நக்கீரன் கோபால் கைது ஏன்.. இந்த கட்டுரைதான் காரணம்!
நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் கைது செய்யப்பட்டது ஏன் என்பதற்கான விவரங்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video

சென்னை: நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் கைது செய்யப்பட்டது ஏன் என்பதற்கான விவரங்கள் வெளியாகி உள்ளது.
நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் இன்று காலை திடீரென கைது செய்யப்பட்டார். இவரது கைது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு அவர் காலையில் வந்தார். அப்போது அவரை கிண்டி போலீஸார் கைது செய்தனர்.

புகார் அளித்தனர்
ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிகளை பாலியல் முறைகேடுகளில் ஈடுபட அழைத்ததாக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி குறித்த கட்டுரை காரணமாக இவர் மீது புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.

விசாரிக்கப்பட்டு வருகிறார்
இவர் தற்போது போலீசால் விசாரிக்கப்பட்டு வருகிறார். இன்று காலை சென்னை விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார். கோபால் மீது என்ன பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் தெரியவில்லை.

என்ன கட்டுரை
நக்கீரன் இதழில் வெளியான கட்டுரையொன்றுதான் இந்த பிரச்சனைக்கு காரணம். ''4 முறை ஆளுநரை சந்தித்தேன் : நிர்மலா தேவி பரபரப்பு வாக்குமூலம்'' என்ற தலைப்பில் நக்கீரன் இதழில் வெளியான கட்டுரைதான் நக்கீரன் கோபால் மீதான நடவடிக்கைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடும் எதிர்ப்பு
பத்திரிக்கை ஆசிரியர் ஒருவரை ஆளுநர் மாளிகை அளித்த புகாரின் பேரில் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செய்தியாளர்கள், பத்திரிக்கையாளர்கள் இதற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். தேசிய அளவில் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications