தமிழகத்தில் மட்டும் மோடிக்கு பதிலாக 'லேடி' அலை வீசியது ஏன்.. காரணங்கள் இவைதான்!
சென்னை: மோடி அலையில் இருந்து தப்பித்து தமிழகத்தில் ஜெயலலிதா அலை வீச காரணம் என்ன என்று அரசியல் விமர்சகர்கள் மண்டையை பிய்த்துக்கொண்டுள்ளனர். அந்த காரணங்கள் தமிழக மக்களுக்கே உரிய தனித்துவமானவை.
ஜெயலலிதா அரசு 3 ஆண்டுகளை முடித்து நான்காம் ஆண்டில் காலடி எடுத்து வைக்க உள்ளது. அதாவது மற்றொரு வகையில் கூறினால், மூன்றாண்டு கால ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பு அலையை அதிமுக சம்பாதித்திருக்க வேண்டும்.
இதையே வேறுவகையில் பார்த்தால், அடுத்த இரண்டாண்டில் திமுக கையில் ஆட்சியை ஒப்படைக்க தமிழக மக்கள் தயாராக இருக்கிறார்கள். ஏனெனில் ஆட்சியை இவ்விரு கட்சிகளிடமும் மாறி மாறி ஒப்படைப்பதுதான் தமிழக மக்களின் வழக்கம்.
இப்படியொரு சூழ்நிலையில் அதிமுக தனித்து போட்டியிட்டு பெற்றுள்ள அபார வெற்றி வட இந்திய விமர்சகர்களை வாயடைக்க செய்கிறது. ஆனால் தமிழர்களுக்கே உரித்தான சில காரணங்கள் இந்த வெற்றியின் பின்னணியில் உள்ளன. அந்த முத்தான முக்கிய காரணங்கள் இவைதான்:

ஆளும் கட்சிக்கே ஓட்டு..
தமிழக மக்கள் எப்போதுமே யார் ஆட்சியில் இருக்கிறார்களோ அவர்களுக்கே நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பார்கள். இடைத்தேர்தல்கள் நடந்தாலும் இதுதான் நிலை. ஆனால் இந்தியாவின் பிற மாநிலங்களில் இதுபோன்ற டிரெண்ட் கிடையாது. இடைத் தேர்தலிலேயே டெபாசிட் இழந்த ஆளும் கட்சிகள் எல்லாம் பிற மாநிலங்களில் உள்ளன. எனவே இப்போதும் மக்கள் தங்கள் கடமையை செவ்வனே செய்துள்ளதாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

சட்டம் ஒழுங்கு சூப்பர்..
மின்சார தட்டுப்பாடு பிரச்னையை தவிர பெரிய அளவில் ஆட்சிக்கு எதிரான கோப அலை எதுவும் தமிழகத்தில் இல்லை. அதுபோல சட்டம் ஒழுங்கு வட மாநிலங்களைப்போல கெட்டு ப்போகவும் இல்லை. தமிழக உளவுப்பிரிவு போலீசார் பல தீவிரவாத தாக்குதல்களை முன்கூட்டியே தடுத்து சாதித்துள்ளனர்.

சலுகைகள் நின்றுவிடுமே..
சட்டசபை தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில் பலவும் நிறைவேற்றப்பட்டுள்ளன, சில நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இப்போது வேறு கட்சிக்கு வாக்களித்தால் அந்த சலுகைகளை அரசு அளிக்காமல் நிறுத்தவும் வாய்ப்புள்ளது என்பதால் மக்கள் அதிமுகவுக்கு வாக்களித்திருக்கலாம்.

தெளிவான நிலை...
பாஜக, திமுக கூட்டணிகளைப்போல வழவழ இழுவையோ அதிமுகவில் இல்லை. "இவர்தான் வேட்பாளர், இரட்டை இலையில் ஓட்டைப் போடுங்கள்" இந்த இரண்டு வாக்கியங்களும் ஜெயலலிதாவுக்கு போதுமானவையாக இருந்தன.

திமுக, தேமுதிக மீதான வெறுப்பு...
திமுகவில் அழகிரியால் ஏற்பட்ட குழப்பத்தையும், திமுக மீதான இன்னும் மறையாத 2ஜி ஊழல் விவகாரத்தையும், தேமுதிக தலைவர் விஜய்காந்த் நடத்திய கூட்டணி பேரம்- பிரச்சாரத்தில் நடந்து கொண்ட முறையால் எரிச்சலில் இருந்த மக்களின் மன ஓட்டத்தையும், பாமக, தேமுதிக இடையேயான ஒத்துழையாமையும் அதிமுக நன்கு பயன்படுத்திக் கொண்டது.
இவை தான் ஜெயலலிதாவின் இந்த தேர்தல் வெற்றிக்கான முக்கிய காரணங்களாக தமிழக அரசியல் நோக்கர்களால் கூறப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications