Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லஞ்சம் கொடுக்க முயன்றது ஒரு குற்றமா யுவர் ஆனர்? -நாஞ்சில் சம்பத் அடடே கேள்வி

இந்தியாவில் லஞ்சம் வாங்கினால்தான் சட்டப்படி குற்றம். ஆனால் இப்போது கொடுக்க முயன்றாலே குற்றம் என்கிறார்கள் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: இந்தியாவில் லஞ்சம் வாங்கினால்தான் சட்டப்படி குற்றமாகும். ஆனால் இப்போது கொடுக்க முயன்றாலே குற்றம் என்கிறார்கள் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு அதிமுக அம்மா அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், " மோடியின் சதி செயலுக்கு உடந்தையாக இருப்பவர்தான் ஓபிஎஸ். அதிமுகவை காட்டி கொடுத்ததன் மூலம் எட்டப்பன் வரிசையில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது. மோடியின் ஏற்பாட்டில் அவருக்கு 'ஒய்' பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ஒபிஎஸ்க்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருப்பதன் மூலம் ஆயுதங்களுக்கு அவமானம் ஏற்படுத்திவிட்டனர். இங்கு பேச வருவதற்கு முன்பு என்னை பேசக்கூடாது என்று மிரட்டுகிறார்கள். இந்த மிரட்டலுக்கு பயப்படுபவன் நான் அல்ல.

லஞ்சம் கொடுக்க முயன்றால் வழக்கா ?

லஞ்சம் கொடுக்க முயன்றால் வழக்கா ?

இந்தியாவில் லஞ்சம் வாங்க முயன்றால் வழக்கு போடுவதுதான் இதுவரை வழக்கமாக இருந்தது. இப்போது லஞ்சம் கொடுக்க முயன்றால் வழக்கு போடுவது புதிதாக உள்ளது. நீட் தேர்வுக்கு மாநிலத்துக்கு ஒரு பாடத்திட்டம் கொண்டு வருகின்றனர். இதை எதிர்க்க துணிவில்லாத ஓபிஎஸ், சசிகலாவை ஒதுக்கி வைக்க கூறுகிறார்.

மோடியின் காலில் ஓபிஎஸ்

மோடியின் காலில் ஓபிஎஸ்

ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லை. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் என கடுமையான உடல்நல குறைவால் சிரமப்பட்டாலும் அதுகுறித்து வெளியில் தெரியக்கூடாது என்பதில் ஜெயலலிதா கவனமாக இருந்தார். ஆனால் அவரை ஏன் புகைப்படம் எடுத்து வெளியிடவில்லையென கேள்வி எழுப்புகின்றனர். இப்போது ஓபிஎஸ், மோடியின் காலில் விழுந்து கிடக்கிறார்.

புரோக்கர் மைத்ரேயன்

புரோக்கர் மைத்ரேயன்

மோடிக்கும் ஓபிஎஸூக்கும் இடையில் மைத்ரேயன் புரோக்கராக உள்ளார். அதிமுகவை உடைத்துவிட வேண்டுமென துடிக்கின்றனர், அது நடக்காது. மீண்டும் சசிகலா, தினகரன் வருவார்கள்.

வெளிநாடுகளில்999 சொத்து

வெளிநாடுகளில்999 சொத்து

ஆட்சியில் இருந்தபோது பன்னீர்செல்வம் முறைகேடு செய்த சேர்த்த சொத்து பல ஆயிரம் கோடி. துபாய், சிங்கப்பூர், பக்ரைன் உள்ளிட்ட வெளிநாடுகளில் கோடி கணக்கில் சொத்து வைத்துள்ளார். எனவே விரைவில் நாங்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அவர் மீது 9 அமைக்கவும், லஞ்ச ஒழிப்பு துறை மூலம் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துவோம்" என்றார் நாஞ்சில் சம்பத்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+