சென்னை மெரீனா கடற்கரையில் நேற்று ஒரே நாளில் 30 செமீ மழை பதிவு - வானிலை மையம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையின் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. விடிய விடிய கொட்டிய மழையால் அதிகபட்சமாக மெரீனா கடற்கரை, டிஜிபி அலுவலகம் பகுதியில் 30 செமீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையில் 12 மணிநேரம் விடாமல் கொட்டிய மழையால் வெள்ளக்காடானது. சென்னையின் சில இடங்களில் அதிகபட்சமாக மெரீனா கடற்கரை, மயிலாப்பூர் டிஜிபி அலுவலகம் அமைந்துள்ள பகுதிகளில் 30 செமீ மழை பதிவானது. சத்யபாமா பல்கலைக்கழகம் பகுதியில் 20 செமீ பதிவானது.

Record rain in Chennai

தரமணியில் 19 செ.மீ மழை பெய்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் 18 செமீ மழை அளவு பதிவாகியுள்ளது. அண்ணா பல்கலையில் 15 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மீனம்பாக்கத்தில் 14 செமீ மழையும் புழலில் 9 செமீ மழை பதிவாகியுள்ளது.

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடரும் எனவும் சென்னையின் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Several areas, particularly in south Chennai, had a heavy downpour during morning hours something more like a cloud burst. Tharamani received 19 CM rainfall on Thursday night.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற