தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குப்பதிவு நடைபெற்ற சட்டசபை தொகுதி வீரபாண்டி.. 2ஆம் இடத்தில் கரூர்!
சென்னை: தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டசபை தொகுதியில் 93.41 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அதற்கு அடுத்ததாக கரூர் சட்டசபை தொகுதியில் 93.39 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்தது. வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையில் வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.

இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது. மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
85% வாக்குப்பதிவு
இதில் 1951 முதலான மாநில தேர்தல் வரலாற்றிலேயே சதவிகித அடிப்படையில் அதிகபட்சமான வாக்குப்பதிவு இன்று நடந்துள்ளது. மாலை 6 மணி நிலவரப்படி 84.51 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தன. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்களின்படி தமிழ்நாட்டில் 85.06% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
வீரபாண்டி, கரூர்
கரூர் மாவட்டத்தில் 92.66% வாக்குப்பதிவு நடந்துள்ளது. சேலம், தருமபுரி, ஈரோடு மாவட்டங்களில் வாக்குப்பதிவு சதவீதம் 90%ஐ கடந்துள்ளது. சட்டசபை தொகுதி வாரியாக பார்த்தால் தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டசபை தொகுதியில் 93.41 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அதற்கு அடுத்ததாக கரூர் சட்டசபை தொகுதியில் 93.39 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
கரூர் வேட்பாளர்கள்
கரூர் சட்டசபை தொகுதியில் திமுக வேட்பாளராக ஆசி. எம். தியாகராஜன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தவெக சார்பில் மதியழகன், நாம் தமிழர் கட்சி சார்பில் கருப்பையா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
வீரபாண்டி வேட்பாளர்கள்
வீரபாண்டி தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்தைச் சேர்ந்த தருண், அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ மனோன்மணியின் மகன் பாலாஜி சுகுமார், தவெக சார்பில் பழனிவேல், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜேஷ்குமார் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications