முன்னாள் டிஜிபியின் உறவினரை 3 துண்டுகளாக வெட்டி ஆற்றில் தூக்கிப் போட்ட கொலையாளிகள்!
சேலம்: முன்னாள் போலீஸ் டிஜிபி ராமானுஜத்தின் உறவினர் ஒருவரை நிலத் தகராறில் சிலர் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். அவரது உடலை 3 துண்டுகளாக வெட்டி காவிரி ஆற்றில் போட்ட செயல் பெரும் பரபரப்பை ஏற்ப[டுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வடுகபட்டி அண்ணாநகரை சேர்ந்தவர் துரைசாமி. ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். கடந்த புதன்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்ற, துரைசாமி வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது மனைவி கனகவள்ளி, சங்ககிரி போலீசில் புகார் செய்தார்.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியின் பின்புறம் காவேரி ஆற்றங்கரை ஓரம் கழுத்தறுக்கப்பட்டு 3 துண்டுகளாக ஒரு உடல் கிடந்தது. இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் போனது. அவர்கள் விரைந்து சென்று உடல் பாகங்களை மீட்டு விசாரணையைத் தொடங்கினர். அப்போதுதான் அது சங்ககிரியில் காணாமல் போன துரைசாமி என்பது தெரிய வந்தது.
துரைசாமி, முன்னாள் டிஜிபியும், தற்போது தமிழக அரசின் ஆலோசகராக உள்ளவருமான ராமானுஜத்தின் உறவினர் ஆவார். இதனால் பரபரப்பு கூடியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்திய போலீஸார், ஐவேலி ஊராட்சி மன்ற தலைவரும், ஜெயலலிதா ஒன்றிய செயலாளருமான ராம்சந்தர் என்பவரது டிரைவர் சண்முகம், குமாரபாளையத்தை சேர்ந்த மஞ்சுநாதன், சுப்பிரமணி, மணி என்கிற கருவாமணி ஆகிய 5 பேரை கைது செய்துள்ளனர்.
நிலத்தகராறு மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இந்தக் கொலை நடந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications