போக்குவரத்து நெரிசலைக் குறைக்க... 14 ரோடுகளை அகலப்படுத்தும் சென்னை மாநகராட்சி
சென்னை: சென்னை மாநகராட்சி, நகரில் உள்ள 14 சாலைகளை அகலப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் இப்பகுதியில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெருக்கடி வெகுவாக குறையும் எனறு மாநகராட்சி கருதுகிறது.
ஏற்கனவே 24 சாலைகளை அகலப்படுத்துவதாக அறிவித்திருந்தது சென்னை மாநகராட்சி. தற்போது 14 சாலைகளை அகலப்படுத்த மாநகராட்சி முடிவு செய்து அறிவித்துள்ளது.
இந்த 14 சாலைகளில் அகலப்படுத்தும் பணி தொடர்பான ஆய்வுகள் முடிவடைந்துள்ளன. வாகனங்கள் எவ்வளவு செல்கின்றன. ஆக்கிரமிப்புகள் என்ன என்பது உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

ஜூலை மாதத்திற்குள்...
அடுத்து நிலத்தை ஆர்ஜிதம் செய்த பின்னர் சாலைகள் அகலமாக்கும் பணி தொடங்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். ஜூலை மாதத்திற்குள் இது தொடர்பான பணிகள் தொடங்கும் என்று ஒரு மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

அகலமாக்கப்படவுள்ள சாலைகள்...
தற்போதைய திட்டப்படி சர்தார் படேல் சாலை, நெல்சன் மாணிக்கம் சாலை, சாந்தோம் ஹை ரோடு, பெரம்பூர் பாரக்ஸ் சாலை, ஸ்டிராஹன்ஸ் சாலை, முத்துலட்சுமி சாலை, கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலை, காளியம்மன் கோவில் தெரு, பேப்பர் மில்ஸ் சாலை, செம்பியம் ரெட் ஹில்ஸ் சாலை, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம் ஹைரோடு, ஜெயராமன் தெரு, மசூதி தெரு ஆகியாவையே அகலமாக்கப்படவுள்ள சாலைகள் ஆகும்.

போக்குவரத்து நெரிசல்...
பீக் அவர் நேரங்களில் இந்த சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மிகக் கொடூரமாக இருக்கும். இப்போது இந்த சாலைகள் அகலமாவது அப்பகுதி மக்களிடையே பெரும் நிம்மதியைக் கொடுத்துள்ளது.

கோரிக்கை...
இந்த சாலைகளோடு நின்று விடாமல் பிற சாலைகளையும் அகலப்படுத்தி போக்குவரத்து சமூகமாக நடைபெற சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் சென்னை மக்களின் கோரிக்கை ஆகும்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications