கரூரில் சிக்கிய 2 பெண் மாவோயிஸ்டுகள் கோர்ட்ட்டில் ஆஜர்.. சிறையிலடைப்பு!
கரூர்: கரூரில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் 2 பேரையும் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை சிறையில் அடைக்க மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வனப்பகுதியில், கடந்த 2002-ஆம் ஆண்டு மாவோயிஸ்டுகள் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்ட முயன்றனர். அப்போது மாவோயிஸ்டடுகளுக்கும், க்யூ பிரிவு போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் போது பார்த்திபன் என்ன மாவோயிஸ்ட் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், 29 பேர் கைது செய்யப்பட்டனர்.
இருப்பினும் சம்பவ இடத்தில் இருந்து சில மாவோயிஸ்டுகள் தப்பியோடிவிட்டனர். அவர்களைக் க்யூ பிரிவு போலீஸார் தேடி வந்தனர். இதனிடையே சென்னை அம்பத்தூரில் தலைமறைவாக வாழ்ந்து வந்த மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய நிர்வாகி விவேக் இரு ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அதன் பின்னர், அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வந்தனர்.

கரூரில் 2 மாவோயிஸ்ட் கைது
இந்நிலையில். கரூரில் சந்திரா, கலா என்ற பெண் மாவோயிஸ்ட்களை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் காஞ்சிபுரம் மாவட்டம் எருமையூரில் மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருப்பதை போலீஸார் கண்டறிந்தனர். இதையடுத்து அங்கு வீட்டில் தங்கியிருந்து கல்குவாரில் ஒன்றில் வேலை செய்து வந்த பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவர் தப்பியோடிவந்த மாவோயிஸ்ட் ரீட்டா ஜாய்ஸ் மேரி (42) என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து க்யூ பிரிவு போலீஸார், அவரை கைது செய்தனர்.

மவோயிஸ்ட் இயக்கங்களுடன் சந்திப்பு
கைது செய்யப்பட்ட 3 பேரும் அவ்வப்போது கேரளம், கர்நாடக மாநிலங்களின் மலைப் பகுதிக்கு சென்று, அங்கு பதுங்கியிருக்கும் மாவோயிஸ்ட் இயக்கத்தினரை சந்தித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதில் ரீட்டா ஜாய்ஸ் மேரி, மதுரையைச் சேர்ந்தவர். சந்திரா, கலா ஆகியோர் கரூரைச் சேர்ந்தவர்கள்.

நீதிமன்றத்தில் ஆஜர்
இந்நிலையில், கரூரில் கைதுசெய்யப்பட்ட மாவோயிஸ்ட்டுகள் 2 பேரும் கரூர் குற்றவியல் நீதிமன்றம் எண் 1-ல் நடுவர் மோகனவள்ளி முன் ஆஜர் படுத்தப்பட்டனர். அதில் மாவோயிஸ்டுகளை வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை ரிமாண்டில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, திருச்சி மத்திய சிறைக்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டனர்.

கோஷம் எழுப்பியதால் பரபரப்பு
அப்போது மாவோயிஸ்ட்டுகள் இருவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவோஸ்ட்டுகள் வாழ்க வாழ்க எனவும், கியூபிராஞ் மற்றும் காவல்துறையினர் ஒழிக,ஒழிக என கோஷமிட்டனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications