சேலத்தில் விறுவிறு மறுவாக்குப்பதிவு : 90.16 சதவீத வாக்குகள் பதிவு
சேலம்: சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி எண் 254ல் இன்று நடைபெற்ற மறுவாக்குப்பதிவில் 90.16 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
கடந்த மாதம் 24ம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் சேலம் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி எண் 254ல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் அங்கு வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

அதன்படி அந்த வாக்குச்சாவடியில் இன்று காலை 7 மணிக்கு துவங்கி மறுவாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. ஏற்கனவே கடந்த 24ம் தேதி இடது கை ஆட்காட்டி விரலில் மை வைக்கப்பட்டதால், இன்றைய வாக்குப்பதிவில் வாக்காளர்களின் இடதுகை நடுவிரலில் மை வைக்கப்படுகிறது. மேலும், கடந்த 24ம் தேதி வாக்களிக்காதவர்களும் இன்று வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
எடப்பாடி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட 254வது வாக்குச்சாவடியில் 772 வாக்காளர்கள் உள்ளனர். அதில் கடந்த மாதம் 24ம் தேதி 683 பேர் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நடந்த மறு வாக்குப்பதிவில் 90.16 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தம் பதிவான வாக்குகளில் ஆண்கள் 355, பெண்கள்341 என மொத்தம் 696 பேர் வாக்களித்துள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications