கூவத்தூரில் செய்தியாளர்கள் மீது மன்னார்குடி குண்டர்கள் மீண்டும் தாக்குதல்
செய்தியாளர்கள் மீது சசிகலா ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை: கூவத்தூரில் செய்தியாளர்கள் மீது மன்னார்குடி குண்டர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனைக் கண்டித்து செய்தியாளர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளனர்.
சென்னையை அடுத்த கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் எம்.எல்.ஏக்களை கட்டாயப்படுத்தி சிறைபிடித்து வைத்துள்ளது மன்னார்குடி கோஷ்டி. ஒருவாரமாக எம்.எல்.ஏக்கள் அங்கேயே உள்ளனர். இதனால் தங்களது குடும்பங்களை சந்திக்க முடியவில்லை என அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். பல தொகுதிகளில் எம்.எல்.ஏக்களை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அதிமுக எம்எல்ஏ-க்களுடன் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் சசிகலா ஆலோசனை தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் கூவத்தூரில் எம்எல்ஏ-க்கள் தங்கியுள்ள ரிசார்ட் அருகே செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களுக்கு அதிமுக-வினர் அனுமதி மறுத்துள்ளனர்.
இதனால் அதிமுக நிர்வாகிகள், செய்தியாளர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆங்கில நாளிதழ் புகைப்பட நிபுணரை மன்னார்குடி குண்டர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கூவத்தூர் ரிசார்ட் முன் செய்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செய்தியாளர்கள் மீது சசிகலா ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பும் செய்தியாளர்கள் மீது சசிகலா தரப்பு தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications