வேலைக்கார பெண்ணுடன்... மனசு தறிகெட்டு நடந்தால் விபரீதம்தானே ஏற்படும்?!
அடையாறில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொண்டார்.
Recommended Video

வேளச்சேரி: வயது 64 ஆகிறது. ஆனாலும் வீட்டு வேலைக்காரப் பெண் மீது அவ்வளவு ஆசை. அளவு கடந்த ஆசை ஆபத்தில் போய் முடிந்திருக்கிறது.
அடையார் கெனால் பேங்க் பகுதியை சேர்ந்தவர் கலைவாணன். ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவருக்கு ஒரு குடும்பம் உள்ளது. இந்த நிலையில் 2005ம் ஆண்டு முதல் ஒரு பெண் இவரது வீட்டில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அந்த பெண்ணின் அழகு, தோற்றத்தை பார்த்ததும், கலைவாணனுக்கு அவரை மிகவும் பிடித்து போயிற்று.

மறக்கவே முடியவில்லை
ஒருகட்டத்தில் வீட்டு வேலை செய்த பெண்ணை கல்யாணமே செய்து கொண்டார். இந்த விஷயம் முதல் மனைவிக்கு தெரிந்துவிட்டது. அதனால் குடும்பத்தில் பூகம்பம் வெடித்தது. இதனால் வேலைக்காரப் பெண்ணை பிரிய வேண்டிய சூழ்நிலைக்கு கலைவாணன் ஆளானார். ஆனாலும் மனம் முழுவதும் அப்பெண்ணே நிறைந்திருந்தார். அவரை கலைவாணனால் மறக்கவே முடியவில்லை.

வேறு ஒரு திருமணம்
இப்படி திருமணமான ஒருவரை திருமணம் செய்து வாழ்க்கையை வீணாக்கி கொண்டதுடன், கலைவாணனின் குடும்பத்தையும் கஷ்டப்படுத்தி விட்டோமே என வேலைக்காரப் பெண் நினைத்தார். இதனால் கலைவாணனை விட்டு விலகிய அவர் 2 மாதத்திற்கு முன்பு வேறு ஒருவரையும் திருமணம் செய்து கொண்டார். இந்த விஷயம் கலைவாணனின் காதுகளுக்கு எட்டிவிட்டது.

போலீசார் புத்திமதி
உடனே அந்த பெண்ணுக்கு போன் மேல் போன் செய்து தொந்தரவு செய்ய ஆரம்பித்தார். இப்படி தானும் வாழாமல், தன்னையும் வாழவிடாமல் தொடர்ந்து போன் செய்யவும், அந்தபெண் அடையாறு மகளிர் போலீசில் புகார் செய்தார். இதனால் இரு தரப்பையும் போலீசார் அழைத்து பேசினர். இளம்பெண்ணின் வாழ்க்கையில் இனி தலையிடக்கூடாது என்று எழுதி வாங்கி கொண்டனர். அதேபோல அந்த பெண்ணுக்கும் புத்திமதி கூறி அனுப்பி வைத்தனர்.

ஏமாற்றத்தில் கலைவாணன்
போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று வந்தும் கலைவாணனுக்கு அவமானமோ, அசிங்கமோ ஏற்படவேயில்லை. எண்ணம் முழுவதும் அந்த பெண் மீதே இருந்தது. அவரை தூங்குவதும் இல்லை. சாப்பிடுவதும் இல்லை. இதனால் நாளுக்கு நாள் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. இரண்டு தினங்களுக்கு முன்பு, அந்த பெண் போரூருக்கு வந்திருப்பதாக கலைவாணனுக்கு தகவல் வந்தது. இதையடுத்து ஆர்வத்துடன், ஆசையுடன் போரூர் சென்றார் கலைவாணன். ஆனால் அங்கே அந்த பெண் எங்கோ வெளியில் சென்றிருந்தபடியால் ஏமாற்றத்துடன் தன் வீட்டுக்கு வந்துவிட்டார்.

மனம் உடைந்தார்
இந்த விஷயம் அந்த பெண்ணுக்கு தெரியவந்ததும், ஆத்திரமடைந்தார். இப்படி தன்னை நேரிலும் வந்து தொந்தரவு கொடுத்தால் என்ன அர்த்தம் என்று கலைவாணன் வீட்டுக்கே வந்து சண்டை போட ஆரம்பித்துவிட்டார். இவ்வளவு அன்பாக இருந்தும், எவ்வளவு நடந்தாலும் தேடி தேடி சென்றாலும் தன்னை வேலைக்கார பெண் ஏற்றுக் கொள்ளவில்லையே என்று மனம் உடைந்தார்.

தறிகெட்டு போன மனசு
அன்றைய இரவே கலைவாணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து, அடையார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோதுதான் இவ்வளவு உண்மைகளும் தெரியவந்தது. 64 வயதாகிறது என்பதையும் மறந்து, ஒரு காலத்தில் விறைப்பான போலீஸ் அதிகாரியாக இருந்தோம் என்பதையும் மறந்து, குடும்பத்தையும் மறந்து, அந்த இளம்பெண்ணின் எதிர்காலத்தையும் மறந்து ... இப்படி மனசு தறிகெட்டு நடந்தால் விபரீதம்தானே ஏற்படும்?
-
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications