பெற்ற மகளையே ஆபசமாக பார்த்த கப்பல்படை அதிகாரிக்கு புழல் சிறை
சென்னை: மது போதையில் பெற்ற மகளையே ஆபசமாக பார்த்த காமூகத் தந்தையை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர் போலீசார்.
திருவேற்காட்டை சேர்ந்தவர் சார்லஸ் (61). இவர் கப்பல் படையில் அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மகள் ரம்யா (21) பெயர் மாற்றப்பட்டுள்ளது). அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் ரம்யா, வியாழக்கிழமையன்று திருவேற்காடு போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் தனது தந்தை சார்லஸ் கப்பல் படையில் அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். அவர் வீட்டில் வைத்து மது அருந்தி கொண்டும், டி.வி.யில் ஆபாச படங்களை பார்த்துக் கொண்டே இருப்பார்.
அப்போது குடிபோதையில் பெற்ற மகள் என்றும் நினைக்காமல் தன்னையே அவர் ஆபாசமாக பார்த்தார். இதனால் நான் கடும் மன உளைச்சலுக்கு ஆளானேன். அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று புகார் கூறி இருந்தார்.
இதைத்தொடர்ந்து திருவேற்காடு போலீசார் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சார்லசை கைது செய்தனர். பின்னர் அவர் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications