For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொதுமக்களுக்கான ஏற்பாடுகள் சரியாக செய்யப்பட்டுள்ளதா? ஜெ நினைவிடத்தில் அமைச்சர் ஆய்வு...

முதல்வர் ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் அமைச்சர் உதயகுமார் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது அங்கு அஞ்சலி செலுத்த வரும் மக்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து கே

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் திடீர் ஆய்வு செய்தார்.

முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி முதல்வர் ஜெயலலிதா கடந்த திங்கட் கிழமை காலமானார். அவரது உடல் செவ்வாய்க்கிழமை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Revenue Minister visits in the place of jayalalitha burial place

அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டு 6 நாட்கள் ஆகியும் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் அங்கு குவிந்து வருகின்றனர். அவ்வாறு வரும் மக்களுக்கு அதிமுக சார்பில் உணவு, தண்ணீர் பாட்டில்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

English summary
Revenue Minister Uthayakumar paid a visit to the place where late Jayalalitha's body buried. He inquired about the arrangements made for the public who come to pay tribute.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X