எனக்கு என்ன மரியாதை கொடுத்திருக்கீங்க? திருநாவுக்கரசரிடம் சீறிய இளங்கோவன்
தமக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை என திருநாவுக்கரசரிடம் சீறியிருக்கிறார் இளங்கோவன்.
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசரும் அவரது ஆதரவாளர்களும் தம்மை புறக்கணிக்க தொடங்கியுள்ளதாக முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சீறியுள்ளார்.
இந்திரா காந்தியின் 100-வது பிறந்த நாள் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்பட்டது. தமிழகத்திலும் கொண்டாடப்பட்டாலும் கோஷ்டி கானங்கள் சூப்பராக எதிரொலித்தது.

கோஷ்டி பூசல்
திருநாவுக்கரசும் அவரது ஆதரவாளர்களும் யானைக் கவுனியிலும் இளங்கோவன் அண்ட் கோ புரசை வாக்கம் தாணா தெருவிலும் இந்திரா பிறந்த நாளை கொண்டாடினர். பின்னர் அனைத்து கோஷ்டிகளும் சத்தியமூர்த்தி பவன் கொண்டாட்டத்துக்கு வந்தன.

திருநா அழைப்பு
அங்கு வழக்கமான நிகழ்வுகள் முடிந்த உடன், இளங்கோவனிடம் காமராஜர் அரங்கத்தில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது; நீங்கள் அவசியம் வரவேண்டும் என கேட்டிருக்கிறார் திருநாவுக்கரசர்...

சீறிய இளங்கோவன்
இதற்குத்தான் காத்திருந்தேன் என்றவறாய் சீறியிருக்கிறார் இளங்கோவன்.. ஆமா நீங்க எனக்கு என்ன மரியாதை கொடுத்திருக்கிறீங்க... முன்னாள் தலைவர்... முன்னாள் மத்திய அமைச்சர்.. என்னதான் குமரி ஆனந்தன் என்னை விட சீனியர்னாலும் என் பேரைத்தான் உங்களுக்கு அடுத்து போடனும்..என பொரிந்து தள்ளியிருக்கிறார்...

வெச்சு செய்யும் திருநா கோஷ்டி
இளங்கோவனின் காட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திருநாவுக்கரசர் அமைதியாக இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார். திருநாவுக்கரசரை தலைவராக்கவே கூடாது என கங்கணம் கட்டியவர் இளங்கோவன் என்பதால் தற்போது அவரை ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் 'வெச்சு செய்கிறார்களாம்' திருநா தரப்பு.
என்றைக்கு யார் வேட்டி உருவப்படுமோ?
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications