ஆர்.கே.தொகுதி இடைத்தேர்தல் – நடத்தை விதிமுறைகள் சென்னை மாவட்டம் முழுவதும் அமல்!!
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு ஜூன் 27 ஆம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை மாவட்டம் முழுவதுமே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் சென்னை மாவட்டம் முழுவதற்குமே அரசு திட்டங்களை அமல்படுத்த முடியாது
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.
இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா வெளியிட்ட அறிக்கையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அனைத்தும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள், அரசு மற்றும் அந்த தொகுதி அமைந்துள்ள சென்னை மாவட்டத்தில் உடனடியாக அமலுக்கு வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.
ஸ்ரீரங்கத்தில் முதல் முறை:
இடைத்தேர்தல் தொடர்பாக திருத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிமுறைகள், தமிழகத்தில் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலின் போது முதன் முதலாக அமலுக்கு வந்தன. தற்போது அதே விதிமுறைகள் இந்த இடைத்தேர்தலிலும் நீடிப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறினார்.
அமலுக்கு வரும் திருத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிமுறைகளின் விவரம்:
தேர்தல் நடத்தை விதிகளில் சில அம்சங்கள் 2012 ஆம் ஆண்டு ஏப்ரலில் திருத்தப்பட்டன. அதன்படி, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வரும் திட்டங்களை அமல்படுத்துவது, இயற்கை பேரிடர், வறட்சி, வெள்ளம் ஆகியவை தொடர்பான நிவாரணம் வழங்குவது; குடிநீர், ஆழ்துளை கிணறு தோண்டுவது, கால்நடை தீவனம், வேளாண்மை குறித்த திட்டங்கள்;
தொகுதியில் மட்டுமே அமல்:
விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் திட்டம்; எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு திட்டங்கள் உள்ளிட்ட புதிய மேம்பாட்டு திட்டங்கள்; புதிய திட்டங்களை அறிவித்து தொடங்குவது; சலுகைகள், நிதி உதவிகள் அளிப்பது; பிற சொத்துகள் மீது தேர்தல் விளம்பரம் செய்தல்;
இவையெல்லாம் தொகுதிக்குதான்:
அரசு சொத்துகளை தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்துதல் ஆகிய திட்டங்களை அமல்படுத்துவதை ஒழுங்குபடுத்துவது தொடர்பான இந்திய தேர்தல் கமிஷனின் அறிவுரைகள் அனைத்தும் இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிக்கு உட்பட்ட பகுதிக்குள்தான் பொருந்துமே தவிர அந்த தொகுதி அமைந்துள்ள ஒட்டுமொத்த மாவட்டத்துக்கும் பொருந்தாது.
சென்னை மாவட்ட விதிமுறைகள்:
ஆனால், மேற்கூறப்பட்ட திட்டங்கள் தொடர்பான விதிகள் தவிர, அமைச்சர்களின் பயணம், வாகன பிரச்சாரம், விளம்பரம், அரசு விருந்தினர் மாளிகையை பயன்படுத்துதல், அதிகாரிகள் பணியிடமாற்றம் உள்பட மற்ற அம்சங்களுக்கான அனைத்து விதிகளும் அந்த தொகுதி அடங்கியுள்ள மொத்த சென்னை மாவட்டத்துக்கும் பொருந்தும்.

மற்ற இடங்களில் அமலாக்கலாம்:
இந்த விதிமுறைகளின்படி பார்க்கும்போது, மெட்ரோ ரெயில் திட்டம் போன்ற சில முக்கியமான திட்டங்களை ஆர்.கே.நகர் தவிர சென்னையின் மற்ற இடங்களில் அரசு அமல்படுத்த முடியும்.
முதல்வராக முடியாது:
ஆனால் முதல்வராகவும், வேட்பாளராகவும் இருந்து கொண்டு அந்த திட்டத்தை ஒருவரால் தொடங்கி வைக்க முடியாது. அதுமட்டுமல்லாமல், சென்னையில் அரசு கார்களில் அமைச்சர்கள் பயணிப்பதை தவிர்க்க வேண்டிய நிலையும் ஏற்படும் எனத் தெரிகின்றது.
ஆய்வுக்குரிய விஷயம்:
இதுகுறித்து உயர் அதிகாரி ஒருவர், "முதல்வராக இருக்கும் ஒருவர் வேட்பாளராக இருப்பதில் தடை இருப்பதாக தெரியவில்லை. அதுபோல் அவரால் வேறிடத்தில் ஒரு திட்டத்தை தொடங்கி வைக்க முடியுமா என்பதும் ஆய்வுக்குரிய விஷயமாக உள்ளது.
மற்ற இடங்களில் தயக்கமில்லை:
மேலும், சென்னை தவிர மாவட்டங்களில் அமைச்சர்களுக்கு அரசு குடியிருப்போ, அமைச்சர் அலுவலகமோ இருப்பதில்லை. எனவே இந்த விதிகளை அங்கு அமல்படுத்துவதில் தயக்கம் ஏற்பட்டதில்லை.
தேர்தல் கமிஷனுடன் ஆலோசனை:
ஆனால் சென்னையில் அனைத்து அமைச்சர்களுக்கும் அரசு வீடுகளும், அமைச்சர் அலுவலகமும், அரசு கார்களும் உள்ளன. எனவே சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தும்போது அவர்களுக்காக மேற்கொள்ள வேண்டிய விதிகள் பற்றி இந்திய தேர்தல் கமிஷனுடன் ஆலோசிக்க வேண்டியதுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு பொருந்தும்:
இதற்கிடையே தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் எஞ்சிய மானிய கோரிக்கைகள் குறித்த அலுவல்கள் நடத்தப்பட வேண்டும். சட்டமன்றத்தில் அறிவிக்கப்படும் பெரும்பாலான திட்டங்கள், பொதுவாக தமிழ்நாடு மொத்தத்துக்கும் பொருந்துவதாக அமையும்.
ஆர்.கே நகரில் அமலாக்க முடியாது:
ஆனால் தேர்தல் நடத்தை விதிப்படி, அறிவிக்கப்படும் எந்த திட்டத்திற்குள்ளும் ஆர்.கே.நகர் வரக்கூடாது. அந்த தொகுதிக்கான திட்டங்கள் எதையும் அரசு அறிவிக்கக்கூடாது. எனவே சட்டசபை கூட்டத்தொடரை நடத்துவதற்கு தடை ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இடைத்தேர்தலுக்கு பிறகு:
தமிழகத்தின் பட்ஜெட் கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்டதால், அதிலிருந்து 6 மாதங்கள் வரை அரசு துறைகளுக்கான மானிய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அவகாசம் உள்ளது. எனவே இடைத்தேர்தல் முடிந்த பிறகுகூட சட்டசபையை கூட்ட வாய்ப்புள்ளதாக சட்டசபை வட்டாரத்தில் கூறப்பட்டது.
வேட்புமனுத்தாக்கல்:
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் தாக்கல் ஜூன் 3 ஆம் தேதி தொடங்குகிறது. வாக்குப் பதிவு ஜூன் 27 ஆம் தேதி நடைபெறுகிறது.
சில கட்சிகளே போட்டியிடும்:
இடைத்தேர்தல் குறித்து எந்தக் கட்சிகளும் சிந்திக்காத நிலையில், திடீரென ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆளும்கட்சியான அதிமுக உள்ளிட்ட சில கட்சிகளே இடைத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள்












Click it and Unblock the Notifications