ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவது பற்றி ஜூன் 1-ல் முடிவு; இ.கம்யூ.
Subscribe to Oneindia Tamil
திருச்சி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி வரும் 1-ந் தேதி முடிவெடுக்கப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
திருச்சி அருகே மணப்பாறையில் நேற்று செய்தியாளர்களிடம் முத்தரசன் கூறியதாவது:
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவது குறித்து வரும் 1-ந் தேதி நடைபெறும் மாநில நிர்வாகக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

பின்னர் 3-ந் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம் நடைபெறுகின்றது. அதைதொடர்ந்து இரு கட்சிகளும் கூடி பேசி இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு முத்தரசன் கூறினார்.












Click it and Unblock the Notifications