ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குலுக்கள் முறையில் தேர்வு
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு மையங்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டன.
ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் 27ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலுக்காக ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட எட்டு வார்டுகளில் 230 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு 230 கட்டுப்பாட்டு கருவிகள், வாக்குப்பதிவு இயந்திரங்கள், பழுதானால் மாற்றுவதற்கு கூடுதல் இயந்திரங்கள் என 750க்கும் மேற் பட்ட இயந்திரங்கள் தேவைப்படும்.

வாக்குப்பதிவுக்கு தயார்
இதற்காக சென்னை வேளச்சேரியில் உள்ள மாநகராட்சி சமூக நலக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்த 1,100 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 300 கண்ட்ரோல் யூனிட் (ஓட்டுகளை கணக்கீடும்) இயந்திரங்களும் கடந்த 7ம் தேதி புது வண்ணாரப்பேட்டையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டது. அங்கு கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்த இயந்திரங்களை மறு சீரமைத்து தயார்படுத்தும் பணி ஞாயிறன்று முடிவடைந்தது.

அதிகாரிகள் ஆய்வு
இந்த இயந்திரங்களை தேர்வு செய்யும் பணி நேற்று நடந்தது. சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான விக்ரம் கபூர் தலைமையில், தேர்தல் துறை அதிகாரிகள் இந்த பணியில் ஈடுபட்டனர். இதில் வாக்குப்பதிவு மையங்களுக்கு தேவையான இயந்திரங்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டன. காலை 11 மணிக்கு தொடங்கிய இப்பணி பிற்பகல் 1 மணிக்கு நிறைவடைந்தது.

அதிமுக மட்டும் பங்கேற்பு
இயந்திரங்கள் தேர்வு செய்வதற்கான கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயலலிதா சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல் கலந்துகொண்டார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சி.மகேந்திரன் மற்றும் பெரும்பாலான சுயேச்சை வேட்பாளர்கள் கலந்துகொள்ளவில்லை.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் 28 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால் வாக்குப்பதிவுக்கு 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஒரு வாக்குச்சாவடிக்கு 2 மின்னணு வாக்கு இயந்திரங்களும் மற்றும் ஒரு கண்ட்ரோல் யூனிட் இயந்திரமும் என மொத்தம் 230 வாக்குச்சாவடி மையங்களுக்கு 460 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 230 கண்ட்ரோல் யூனிட் இயந்திரங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்ட இயந்திரங்களில் வாக்குப்பதிவு அன்று ஏதேனும் கோளாறு ஏற்பட்டால், அதனை நிவர்த்தி செய்யும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 சதவீத இயந்திரங்கள் முன்பதிவு அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

புகைப்படம் ஒட்டும் பணி
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் புகைப்படம், பெயர், சின்னம் பதிவு செய்யும் பணி ஒரு சில தினங்களில் தொடங்கும் என்று தேர்தல் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

அலுவலகர்களுக்கு பயிற்சி
தேர்தல் வாக்குப்பதிவு பணியில் ஈடுபட உள்ள 1,191 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு கடந்த 10ம் தேதி முதற்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. 2ம் கட்டமாக அவர்களுக்கு இன்று (புதன்கிழமை) சென்னை பிராட்வேயில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications