இரட்டை இலை கிடைச்சிருச்சு... ஆர்.கே.நகரில் வாயெல்லாம் பல்லாக வாக்கு சேகரிக்கும் வளர்மதி
ஆர்.கே. நகர் தொகுதியில் அதிமுகவினர் இரட்டைஇலையோடும், இரண்டு விரலை உயர்த்தியபடியும் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
சென்னை: ஆர்.கே. இடைத்தேர்தல் களம் களைகட்டியுள்ளது. இரட்டை இலை கிடைத்த மகிழ்ச்சியில் அதிமுகவினர் வீதி வீதியாக வீடு வீடாக சுற்றி வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ள வளர்மதி பம்பரமாக ஆர்.கே.நகரை சுற்றி வருகிறார்.
ஜெயலிதா இல்லாமல் நடக்கும் இடைத்தேர்தல் என்றாலும் அவரது குரல் மதுசூதனுக்கு வாக்கு சேகரிக்கிறது. எல்லாம் அதிமுகவின் ஐடி அணியின் கை வண்ணம்தான்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக களமிறங்கியுள்ள மதுசூதனன் வீடுவீடாக சென்று தீவிரமாக ஆதரவு திரட்டி வருகிறார்.

இறுக்கமாவே இருக்காங்களே
திறந்த ஜீப்பில் வீதிவீதியாக சென்று பிரச்சாரம் செய்து வரும் மதுசூதனனுடன் அமைச்சர்கள் சென்று ஆதரவு கேட்கின்றனர். ஒருபக்கம் ஜெயக்குமார், இன்னொரு பக்கம் செல்லூர் ராஜூ என வாக்கு சேகரிக்க நடுவில் நின்றுள்ள மதுசூதனன் சிரித்த முகத்தோடு வலம் வருகிறார். ஆனால் அவ்வப்போது ஜெயக்குமார்தான் இருக்கமாகிவிடுகிறார்.

இரட்டை இலையோடு
முன்னாள் அமைச்சர் வளர்மதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொப்பியோடு வலம் வந்தார். இம்முறை கையில் இரட்டை இலையோடு வலம் வருகிறார். இந்த தொகுதி அம்மாவின் தொகுதி. இங்கு அம்மா நிறைவேற்றிய திட்டங்களை எண்ணிப் பாருங்கள். அவர் விட்டு சென்ற பணிகள் தொடர மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என்று பிரச்சாரம் செய்கிறார்.

குழந்தைக்கு பேர் வைக்கணுமா?
குழந்தையை வம்படியாக கையில் எடுத்துக்கொஞ்சி பேர் வைப்பது தொடங்கி கண்டிப்பா இரட்டை இலைக்கு ஓட்டுப்போடணும் என்று கூறி வாயெல்லாம் பல்லாக வலம் வருகிறார் வளர்மதி.

பூக்காரக்க ஓட்டு இரட்டை இலைக்கே
பூ விற்கும் பெண்மணியிடம் போய் ஒரு முழம் டிசம்பர் பூ கொடும்மா என்று வாங்கிய வளர்மதி கண்டிப்பா இரட்டை இலைக்கு ஓட்டு போடணும் என்று வந்த வேலையை பார்த்தார். அனைவருக்குமே அக்காவின் சாமர்த்தியமான வாக்கு சேகரிப்பை பார்த்து சிரிப்பை அடக்க முடியவில்லை.

5 பேருக்கு ஓருவர்
துணைமுதல்வர் ஒ.பன்னீர் செல்வம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அ.தமிழ்மகன் உசேன், அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, ஆர்.பி. உதயகுமார், டாக்டர் மைத்ரேயன் எம்.பி., செம்மலை எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் மோகன், மாவட்ட பேரவை செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் உட்பட ஏராளமான பேர் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தபடி வலம் வருகின்றனர்.

வாக்கு சேகரிக்கும் ஜெயலலிதா
ஆர்.கே.நகரில் மதுசூதனனுக்கு ஆதரவாக வாய்ஸ் கால் பிரச்சாரத்தை அண்ணா திமுக தொழில்நுட்ப பிரிவு தொடங்கியுள்ளது. ஜெயலலிதாவே வாக்கு கேட்பதுபோல அதில் அவரது குரல் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா இல்லாத நிலையில் ஆர்.கே.நகரில் அதிமுகவினர் இரட்டை இலையை நம்பி களமிறங்கியுள்ளனர். வெற்றிக்கனி கிடைக்குமா? பார்க்கலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications